நடப்பு நிகழ்வுகள் – 10 ஆகஸ்ட் 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 10 ஆகஸ்ட் 2023
நடப்பு நிகழ்வுகள் - 10 ஆகஸ்ட் 2023
நடப்பு நிகழ்வுகள் – 10 ஆகஸ்ட் 2023

தேசிய செய்திகள்

தேசிய பல் மருத்துவ ஆணைய மசோதா 2023 ஐ நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.

  • ஆகஸ்ட் 08 2023 அன்று தேசிய பல் மருத்துவ ஆணைய மசோதா, 2023 ஆனது நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் மக்களவையில் இந்த மசோதாவானது நிறைவேற்றப்பட்டது.
  • இந்த மசோதாவானது உலகளாவிய தரத்துடன் பல் சார்ந்த மருத்துவ கல்வியை சீரமைக்க முயல்கிறது. மேலும் இது “இந்திய பல் மருத்துவ கவுன்சிலுக்கு” பதிலாக மத்திய தேசிய பல் மருத்துவ ஆணையத்தை நிறுவுவதற்கான  வழிமுறைகளை வழங்குவதை நோக்கமாக கொண்டு இந்த மசோதாவானது நிறைவேற்றப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
  • உரிமம் பெற்ற பல் மருத்துவர்களின் இணையதள பதிவேட்டை மறுசீரமைப்பதற்கான வழிமுறைகளை வழக்கும் என்பது சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

வடகிழக்கு பிராந்தியத்திற்கான சிறப்பு திறன் மேம்பாட்டு முன்னெடுப்பை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

  • ‘வாழ்க்கையை மாற்றுதல், எதிர்காலத்தை உருவாக்குதல்: வடகிழக்கில் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு’ என்ற முன்னெடுப்பு முயற்சியை தர்மேந்திர பிரதான்(மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சர்), கலாச்சாரத்துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி மற்றும் ஐடி அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர் ஆகஸ்ட் 08 2023 இல் தொடங்கி வைத்துள்ளனர்.
  • இதன்படி வடகிழக்கு மாநில பிராந்தியத்தில் உள்ள 250,000 இளைஞர்களுக்கு(மாணவ மற்றும் மாணவியருக்கு) இந்த முன்னெடுப்பு முயற்சியின் கீழ் பரந்த அளவிலான திட்டங்கள் மற்றும் தொழில் சார்ந்த திறன் பயிற்சி கல்வி வழிமுறையானது வழங்கப்படும் என மத்திய அரசு தனது அறிவிப்பாணையில் குறிப்பிட்டுள்ளது.

ஸ்டார்ட்அப்களுக்கான ஆதரவை வலுப்படுத்துவதற்காக இந்திரபிரஸ்தா டெல்லி கல்வி நிறுவனமானது ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

  • ஸ்டார்ட்அப்களுக்கான வழிகாட்டுதல் முயற்சிகளை மேலும் வலுப்படுத்துதல் மற்றும் தொழில்துறை முழுவதிலும் உள்ள முன்னணி நிபுணர்களை அணுகுதல் மற்றும் புதிய முதலீடு மற்றும் நிதி வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு இந்திரபிரஸ்தா டெல்லி (IIIT) கல்வி கழகத்தின் மேம்பாட்டு மையமானது(IIITD-IC), இந்திய YES வங்கியுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்(MoU) ஆகஸ்ட் 2023 இல் கையெழுத்திட்டுள்ளது.
  • தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டார்ட்அப்கள் சிறப்பாகச் செயல்படுவதையும், அதன் வருவாய் ஈட்டும் வழிமுறைகளை உருவாகுவதையும் சிறந்த ஆளுமை திறமைகளை ஈர்ப்பதன் ஒத்துழைப்பை உறுதிப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச செய்திகள்

நைஜர் நாட்டின் ராணுவ தளபதி ஜுன்டா நாட்டின் புதிய இடைக்கால பிரதமராக அலி லாமைனை நியமித்துள்ளார்.

  • நைஜர் நாட்டில் தற்போது இராணுவ ஆட்சிக்குழு மூலம் சில காலங்களாக ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்த சூழ்நிலையில் உலக நாடுகளிடையே கடும் எதிர்ப்பு நிலவியதன் காரணமாக தற்போது அந்த நாட்டின் இடைக்கால பிரதமராக பொருளாதார நிபுணர் அலி லாமின் ஜீன் ஆகஸ்ட் 08 2023 இல் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுட்டள்ளன.
  • மேலும் இந்த தற்போதைய இடைக்கால அரசாங்கத்தின் சுயமாக அறிவிக்கப்பட்ட தலைவரான ஜெனரல் அப்துரஹ்மானே உருவாக்கப்பட்ட இந்த அரசாங்க ஆணையை ஆகஸ்ட் 07 அன்று நாட்டின் தேசிய தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்டுள்ளது மற்றும் 58 வயதான இவர் முன்பு நிதியமைச்சராகப் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஜூலை 2023 மாதமானது இதுவரை உலகின் மிக வெப்பமான மாதமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • ஐரோப்பிய ஒன்றிய அமைப்பின் கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற மன்றமானது, உலகளவில் அதிகரித்து வரும் சுற்றுசூழல் மாற்றம் மற்றும் காலநிலை மாற்ற நெருக்கடியின் தெளிவான ஆய்வின்படி “ஜூலை 2023” மாதமானது இதுவரை உலகளவில் பதிவுசெய்யப்பட்ட மிக அதிகமான வெப்பமான மாதமாக சமீபத்திய அறிவிப்பில் உறுதிப்படுத்தியுள்ளது.
  • இந்த வெப்பநிலை அதிகரிப்பானது உலகின் மிக ஆபத்தான போக்கைக் குறிக்கிறது என்றும் இந்த நிலை தொடர்ந்து நிகழும் பட்சத்தில் உலகின் உள்ள பொது மக்கள் வரும் காலங்களில் மிக கடுமையான சூழ்நிலையில் பாதிக்கப்படுவார்கள் எனவும் கோப்பர்நிகஸின் துணை இயக்குனர் சமந்தா பர்கெஸ் குறிப்பிட்டுள்ளார்.

மாநில செய்திகள்

இந்திய குடியரசுத் தலைவர் ‘உணர்வு வளர்ச்சியின் நகரத்தில் மிகச்சிறந்த திறமைக்காக ஆசைப்படுதல்’ என்ற மாநாட்டைத் தொடங்கி வைத்துள்ளார்.

  • இந்திய குடியரசுத் தலைவர், ஸ்ரீமதி முர்மு, ஆகஸ்ட் 08 2023 அன்று விழுப்புரத்தில் ஆரோவில்லில்  ‘உணர்வு வளர்ச்சியின் நகரத்தில் மிகச்சிறந்த திறமைக்காக ஆசைப்படுதல்’ என்று தலைப்பிடப்பட்ட மாநாட்டைத் தொடங்கி வைத்துள்ளார்.
  • ஒரு மனதின் ஆன்மீக மற்றும் சுயசார்பு விழிப்புணர்வின் மூலம் ஒரு பொதுவான உயிரினத்தை கூட உணர்வுள்ள மனிதனாக மாற்ற முடியும் என்றும் ஒரு கூற்றினை பற்றிய விழிப்புணர்வை உலக மக்கள் அனைவரும் அறிந்து அதன் பயனை உலக பொது வெளியில் கொண்டு செல்வதை நோக்கமாக கொண்டு இந்த மாநாடானது தொடங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

மாநில அரசுப் பள்ளிகளில் “வாழ்க்கைத் திறன் பற்றிய விழிப்புணர்வு கல்வியை வழங்க” ஹரியானா அரசானது திட்டமிட்டுள்ளது.

  • ஹரியானா மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிளும் உள்ள மாணவ மாணவியரின் வாழ்க்கைத் திறன் பற்றிய விழிப்புணர்வு கல்வியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, அம்மாநில அராசாங்கமானது மேஜிக் பஸ் இந்தியா நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஆகஸ்ட் 2023 இல் மேற்கொண்டுள்ளது.
  • மேஜிக் பஸ் இந்தியா அறக்கட்டளையானது இதன் மூலம் 700 அரசுப் பள்ளிகளில் 80,000 இளம் பருவத்தினரின் வாழ்க்கை திறனை மேம்படுத்துவதற்காக கிட்டத்தட்ட 1400 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதை நோக்கமாக கொண்டு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நியமனங்கள்

இந்திய கடலோர காவல்படையின் கூடுதல் பொது இயக்குனராக தளபதி எஸ் பரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

  • முன்னதாக ராணுவ கிழக்கு கடற்பரப்பில் கடலோர காவல்படை மண்டலத்திற்கு தலைமை தாங்கிய தளபதி எஸ் பரமேஷ், இந்திய கடலோர காவல்படையின் வரிசையில் கூடுதல் பொது இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள கடற்படை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இவர் புது டெல்லியில் உள்ள இந்திய கடலோர காவல்படை தலைமையகத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளார். பல ஆண்டுகால பணி போர் முன்னனுபவம் உள்ள இவர் தனது சீரிய திருத்த நடவடிக்கைகளின் மூலம் தனது பணியை சிறப்பாக மேற்கொள்ளுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமி அமைப்பானது சீன் வெக்டரை அதன் தலைமை தகவல் அதிகாரியாக நியமித்துள்ளது.

  • அதிநவீன இணைப்பு மற்றும் ஆட்டோமேஷன் துறையின் புகழ்பெற்ற Boomi அமைப்பானது, பாதுகாப்பு, IT உள்கட்டமைப்பு, அறிவியல் தரவுகள் மற்றும் நிறுவன அமைப்புகளை மேற்பார்வையிடக்கூடிய பொறுப்பான “தலைமை தகவல் அதிகாரியாக (CIO) சீன் வெக்டரை” நியமிப்பதாக ஆகஸ்ட் 09 2023 அன்று அறிவித்துள்ளது.
  • தகவல் தொழில்நுட்ப செயல்பாடுகளில் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலான நிபுணத்துவத்தை கொண்ட இவர் இந்த நியமனத்திற்கு முன்பாக Benefitfocus நிறுவனத்தில் CIO ஆக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

தாவர உண்ணி வகையை சேர்ந்த டைனோசரின் பழமையான புதைபடிவங்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

  • இந்திய புவியியல் ஆய்வு மையம் (GSI) மற்றும் ஐஐடி-ரூர்க்கி பிரிவு ஆகியவற்றின் விஞ்ஞானிகள் இணைந்து ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சால்மரில் “நீண்ட கழுத்து கொண்ட மற்றும் தாவர உண்ணியான” டிக்ரேயோசொரிட் வகையை சேர்ந்த டைனோசரின் மிக பழமையான புதைபடிவ எச்சங்களை ஆகஸ்ட் 2023 இல் கண்டுபிடித்துள்ளனர்.
  • இதன் மூலம் இந்தியா நிலப்பரப்பானது டைனோசர் பரிணாம வளர்ச்சியின் மிக முக்கிய தளமாக இருந்தது என்றும் கிட்டத்தட்ட 167 மில்லியன் ஆண்டுகள் பழமையான இந்த படிவமானது மேற்கு இந்தியாவின் ராஜஸ்தானின் தார் பாலைவனத்தைக் குறிக்கும் வகையில், “தாரோசரஸ் இண்டிகஸ்” என்று பெயரிடப்பட்டுள்ளதாக GSI தெரிவித்துள்ளது.

விளையாட்டு செய்திகள்

2023 ஆம் ஆண்டிற்கான காமன்வெல்த் இளைஞர் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் ஷோன் கங்குலி வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார்.

  • ஸ்பெய்னின் டிரின்பாகோவில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டிற்கான காமன்வெல்த் இளைஞர் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் அனுப்ரியா வள்ளியோட் மற்றும் ஷோன் கங்குலி ஆகியோர் முறையே இளையோருக்கான 400 மீட்டர் தனிநபர் மெட்லே நீச்சல் போட்டியில் வெண்கலம் மற்றும் வெள்ளி பதக்கங்களை ஆகஸ்ட் 2023 இல் வென்றுள்ளனர்.
  • கங்குலி தனது சிறந்த இந்திய நேரமான 4:25.47 வினாடிகளில் இங்கிலாந்து நாட்டின் ரீஸ் கிரேடியை (4:24:16 வினாடிகள்) பின்னுக்குத் தள்ளி, இந்த பதக்கத்தை தக்க வைத்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடக்கதாகும்.

முக்கிய தினம்

உலக உயிரி எரிபொருள் தினம் 2023

  • ஆகஸ்ட் 9, 1893 இல், சர் ருடால்ஃப் டீசல் முதல் முறையாக கடலை எண்ணெய் கலவையுடன் கூடிய இயந்திர எஞ்சினை இயக்கினார். பின்பு அதிலிருந்து டீசல் இயந்திர எஞ்சினாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த டீசல் இயந்திர எஞ்சினைக் கண்டுபிடித்த சர் ருடால்ஃப் டீசலின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 10ஆம் நாளானது “உலக உயிரி எரிபொருள் தினமாக” கொண்டாடப்படுகிறது. 
  • மரபுசார் எரிசக்தி வளங்களை விட உயிரி எரிபொருள்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களை பயன்பாட்டை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டு இந்த தினமானது கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினத்திற்கென்று எந்த ஒரு கருப்பொருளும் குறிப்பிடவில்லை.

DOWNLOAD PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!