நடப்பு நிகழ்வுகள் – 1 ஜூலை 2023

0
நடப்பு நிகழ்வுகள் - 1 ஜூலை 2023
நடப்பு நிகழ்வுகள் - 1 ஜூலை 2023
நடப்பு நிகழ்வுகள் – 1 ஜூலை 2023

தேசிய செய்திகள்

தேசிய செல் இரத்த சோகை ஒழிப்பு திட்டம் – அறிமுகம்.

  • தேசிய அரிவாள் செல் இரத்த சோகை(Sickle Cell Anaemia) ஒழிப்பு திட்டத்தை பிரதமர் மோடி ஜூலை 01 அன்று மத்திய பிரதேசத்தில் தொடங்கி வைக்க உள்ளார்.
  • இது அரிவாள் உயிரணு(Sickle Cell) நோயால், குறிப்பாக பழங்குடியின மக்கள் மற்றும் மலையோர வசிப்பவர்களிடையே  ஏற்படும் அழுத்தமான சுகாதார சவால்களை நிவர்த்தி செய்வதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். மேலும் 2047 ஆம் ஆண்டுக்குள் இந்த நோயினை நாட்டின் பொது சுகாதாரப் பிரச்சனையிலிருந்து அகற்றுவதற்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளில் இந்த திட்டம் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

நீர்மூழ்கிக் கப்பலின் மேம்பாட்டுக்காக கப்பல் கட்டும் நிறுவனமான மசகான் டாக் உடன்  MoD ஒரு  ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

  • கடல்பரப்பின் கீழிருந்து தங்கி அளிக்கும்(SSK) வகை நீர்மூழ்கிக் கப்பலான “INS ஷங்குஷ்” இன் ஆயுள் சான்றிதழுடன் (MRLC) அதனை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் ஜூன் 30 அன்று பாதுகாப்பு அமைச்சகமானது மசகான் டாக் கப்பல் கட்டும் நிறுவனத்துடன் மும்பையில் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
  • இது ரூ. 2725 கோடி மதிப்பிலான ஒரு கூட்டு ஒப்பந்தமாகும். இது ஐஎன்எஸ் ஷங்குஷ் போர் கப்பலை 2026-க்குள் மேம்படுத்தப்பட்ட போர்த் திறனுடன் இந்தியக் கடற்படையின் செயலில் சேர்ப்பதை நோக்கமாக கொண்டு இந்த ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

லுபிரிக்கண்ட் எண்ணெய் வணிகத்தை விரிவாக்க HPC மற்றும்  ADNOC இடையே ஒரு விநியோக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  • ADNOC விநியோக நிறுவனமானது, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தியா இடையே,  பிற சாத்தியமான சந்தைகளில் தங்கள் லுபிரிக்கண்ட் எண்ணெய் வணிகத்தை மேலும்  விரிவுபடுத்துவதற்காக இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் (HPCL) உடன் ஒரு மூலோபாய கூட்டு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
  • இரு நிறுவனங்களும் தங்கள் உள்ளூர் சந்தை திறன்களையும் உள்கட்டமைப்பையும், தங்கள் வெளிநாட்டு லுபிரிக்கண்ட் எண்ணெய் செயல்பாடுகளின் செயல்திறனையும் மேம்படுத்த மற்றும் வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த ஓப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவுடனான புதுப்பிக்கப்பட்ட விமான ஆராய்ச்சி மற்றும் சேவைகள் ஒப்பந்தத்தை பிலிப்பைன்ஸ் அரசாங்கமானது அங்கீகரித்துள்ளது.

  • பிலிப்பைன்ஸின் வெளியுறவுச் செயலர் என்ரிக் ஏ. மனலோ மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர். எஸ். ஜெய்சங்கர் ஆகியோர் ஜூன் 29 அன்று புதுதில்லியில் இருதரப்பு ஒத்துழைப்புக்கான 5வது இந்தியா-பிலிப்பைன்ஸ் கூட்டுக் குழு கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
  • இந்த நிகழ்வின்போது, எல்லை பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, வான்சார் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் நாடு கடந்த குற்றங்கள் உள்ளிட்ட பல விஷயங்களில் இருதலைவர்களும் இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டனர். மேலும் இந்த கூட்டத்தில் இந்தியாவுடனான புதுப்பிக்கப்பட்ட விமான ஆராய்ச்சி மற்றும் சேவை ஒப்பந்தத்திற்கு பிலிப்பைன்ஸ் ஒப்புதல் அளித்துள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் அறிவித்தார்.

இந்தியா மற்றும் தான்சானியா கூட்டு பாதுகாப்பு ஒத்துழைப்பு குழு கூட்டமானது அறுஷாவில் நடைபெற்றுள்ளது.

  • இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடான தான்சானியா இடையிலான கூட்டு பாதுகாப்பு ஒத்துழைப்பு குழு கூட்டத்தின் இரண்டாவது பதிப்பானது அறுஷா நகரத்தில் ஜூன் 29 அன்று நடைபெற்றுள்ளது.
  • திறன் மேம்பாடு, கடல்சார் ஒத்துழைப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் பகிர்வு மற்றும் தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்பு வரையிலான முன்முயற்சிகளை உள்ளடக்கிய பாதுகாப்பு ஒத்துழைப்புகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான ஒரு ஐந்தாண்டு கால வரைபடமானது இரு தரப்புக்கும் இடையே ஒப்புக் கொள்ளப்பட்டது.

சர்வதேச செய்திகள்

இங்கிலாந்து பிரதமர் 101 வயதான சீக்கியருக்கு “பாயிண்ட்ஸ் ஆஃப் லைட் விருது” வழங்கி கௌரவித்துள்ளார்.

  • ஜூன் 28 அன்று 10-டவுனிங் தெருவில் நடந்த இங்கிலாந்து-இந்தியா வார வரவேற்பு நிகழ்ச்சியில், இரண்டாம் உலகப் போரில் முக்கியமான தருணங்களில் பங்கேற்று உயிர்பிழைத்த கடைசி சீக்கிய வீரர்களில் ஒருவரான ரஜிந்தர் சிங் தாத்தை, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் “பாயிண்ட்ஸ் ஆஃப் லைட் விருது” வழங்கி கௌரவித்துள்ளார்.
  • இவர் இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தில் சேர்ந்தார் மற்றும் பல்வேறு முயற்சிகளின் படி, 1943 இல் ஹவில்தார் மேஜராக (சார்ஜென்ட் மேஜர்) பதவி உயர்வு பெற்றார். மேலும் இவர் பதவி வகித்திருந்த காலங்களில் தனது சீரிய முயற்சிக்காகவும் பிரித்தானிய இந்திய போர் வீரர்களை ஒன்றிணைப்பதற்காக “பிரிக்கப்படாத இந்திய படைவீரர்” என்ற சங்கத்தை நடத்தி வரும் அவரது பணிக்காகவும் இவர் இந்த உயரிய விருதுக்கு அங்கீகரிக்கப்பட்டார்.

இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டாலர் கடனுக்கு  உலக வங்கியானது ஒப்புதல் வழங்கியுள்ளது.

  • இலங்கையில் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பெரும் ஊக்கமளிக்கும் வகையில், 700 மில்லியன் டாலர்களின் குறிப்பிடத்தக்க கடனுக்கு உலக வங்கியானது அனுமதி வழங்கியுள்ளது.
  • இந்த ஒப்புதலின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட நிதிகளில், ஏறக்குறைய 500 மில்லியன் டாலர்கள் பட்ஜெட் ஆதரவிற்காக ஒதுக்கப்படும் என்றும் மீதமுள்ள 200 மில்லியன் டாலர்கள் தற்போதைய நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குவதை நோக்கமாகக் கொண்டு வழங்கப்பட்டுள்ளதாகவும் உலக வங்கி தெரிவிதத்துள்ளது. 

3 பில்லியன் டாலர்கள் உலக வங்கியின் கடன் திட்டத்திற்கு பாகிஸ்தான் அமைச்சரவையானது ஆரம்ப ஒப்புதலைப் பெற்றுள்ளது.

  • பாகிஸ்தானில் நிலவும் கடும் பொருளாதார நிலையை சமாளிப்பதற்காக 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் உலக வங்கியின் கடன் திட்டத்திற்கு அந்நாட்டு அமைச்சரவையானது ஆரம்ப அனுமதி ஒப்புதலை பெற்றுள்ளது. 
  • இந்த நிதி கடன் மூலம் பாகிஸ்தானின் குறிப்பாக அங்குள்ள மக்களின் பொருளாதார சுமையானது கொஞ்சம் தணிவதற்கும் பொருளாதார நிலையானது அசாதாரணமான நிலையிலிருந்து சாதாரண நிலைக்கு திரும்பும் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

பல்பொருள் அங்காடிகளில் பயன்படுத்தப்படும் மெல்லிய நெகிழி பைகளை முதன்முதலில் தடை செய்துள்ளதாக நியூசிலாந்து அறிவித்துள்ளது.

  • பல்பொருள் அங்காடிகளில் வாடிக்கையாளர்கள் தங்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளை மற்ற இதர பொருட்களை சேகரிக்க பயன்படுத்தப்படும் மெல்லிய நெகிழி(பிளாஸ்டிக்) பைகளை தடை செய்துள்ள முதல் நாடு என்ற அந்தஸ்தை நியூசிலாந்து பெற்றுள்ளது.
  • புதிய தடை நெகிழி உரிஞ்சுக் குழாய் (Plastic Straws) மற்றும் 2ஆம் கட்ட நெகிழி பொருட்களுக்கும் இது நீட்டிக்கப்படும் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும் ஏற்கனவே 2019 இல் தடிமனான நெகிழிகளை அந்த அரசாங்கம் தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நியமனங்கள்

முன்னாள் பார்தி ஏர்டெல் MD மற்றும் CEO மனோஜ் கோஹ்லி மூத்த ஆலோசகராக நியமனம்.

  • டெலாய்ட் நிறுவனமானது தொழில்துறையில் மூத்த மற்றும் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான மனோஜ் கோஹ்லியை அந்நிறுவனத்தின் மூத்த ஆலோசகராக நியமித்துள்ளதாக ஜூன் 29 அன்று அறிவித்துள்ளது. 
  • இந்த நியமனத்தின் மூலம் டெலாய்ட்டின் மூத்த ஆலோசகராக, கோஹ்லி தனது புதிய முன்னெடுப்ப்பின் மூலம் விரிவான வணிகம் மற்றும் தொழில் அறிவைப் பயன்படுத்தி, உலகளவில் மற்றும் தெற்காசியாவில் நிறுவனத்தின் இருப்பை வலுப்படுத்த உதவுவார் என்று டெலாய்ட்டின் அறிக்கை கூறுகிறது.


விருதுகள்

புகழ்பெற்ற தொழிலதிபருக்கு ‘பிக் இம்பாக்ட் விருது 2023’ வழங்கப்பட்டுள்ளது.

  • சிம்லாவில் பிக் எஃப்எம் விருது வழங்கும் நிகழ்ச்சியில் “பிக் இம்பாக்ட் விருது 2023” ஆனது  உள்ள ஒரு புகழ்பெற்ற தொழிலதிபரான டாக்டர் சஞ்சீவ் ஜுனேஜா அவர்களுக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.
  • இமாச்சல பிரதேச முதலமைச்சர் தாக்கூர் சுக்விந்தர் சிங் சுகு, துறையில் குறிப்பிடத்தக்க சிறந்த மற்றும் தனித்துவமான பங்களிப்பைச் செய்ததற்காக இந்த விருதை வழங்கி கௌரவித்தார்.

விளையாட்டு செய்திகள்

இந்தியா எட்டாவது முறையாக ஆசிய கபடி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

  • தென் கொரியாவின் புசானில் உள்ள டோங்-ஈயுய் தொழில்நுட்ப வளாகத்தின் சியோக்டாங் கலாச்சார மையத்தில் ஜூன் 30 அன்று நடைபெற்ற மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆசிய கபடி சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் ஈரானுக்கு எதிராக இந்திய அணியானது வென்று பட்டத்தை வென்றுள்ளது.
  • இந்த இறுதி போட்டியில் ஈரானுக்கு எதிராக 42-32 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய அணியானது வென்றுள்ளது. மேலும் ஒன்பது பதிப்புகளில் எட்டாவது முறையாக இந்தியா பட்டத்தை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

பொருளாதார செய்திகள்

பிரேசிலின் மிகப்பெரிய ஸ்டார்ட்அப் பிஸ்மோ நிறுவனம் மற்றும் விசா இடையே ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  • அமெரிக்க கிரெடிட் கார்டு நிறுவனமான விசா ஆனது பிரேசிலின் புகழ்பெற்ற ஃபின்டெக் ஸ்டார்ட்அப் பிஸ்மோ நிறுவனத்தை $1 பில்லியன் (₹8,204 கோடிக்கு மேல்) மதிப்பீட்டளவில்  வாங்குவதற்கான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. 
  • இந்த ஒப்பந்தத்தின் மூலம் விசா நிறுவனத்தின் மதிப்பு மேலும் வளர்ப்படும் என்றும், இந்த முடிவானது பல்வேறு பிரச்சினைகளின் தீர்வாக அமைவதையும் நோக்கமாக கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகும். மேலும் இது ஐரோப்பிய திறந்த வங்கித் தளமான Tink மற்றும் இங்கிலாந்தின் வணிக கடன் வழங்குநரான கரன்சிக்லவ்டு ஆகியவற்றை வாங்கிய 2021க்குப் பிறகு, விசாவின் முதல் மிகப்பெரிய கையகப்படுத்தல் என பொருளாதார வல்லுநர் தெரிவித்துள்ளனர்.

முக்கிய தினம்

உலக சிறுகோள் தினம் 2023

  • 1908 ஆம் ஆண்டில் ஒரு பெரிய, சிறுகோள் வெடிப்பானது ரஷ்யாவின் சைபீரியாவில் ஏற்பட்டது, இதில் கிட்டத்தட்ட 2,150 சதுர கிலோமீட்டர் சைபீரிய காடுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த துயர நிகழ்வை நினைவு கூறும் வகையில் இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
  • உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு சிறுகோள்கள் பற்றி கல்வி கற்பிப்பதையும், அவற்றின் அறிவியல் புரிதலை உலக மக்களிடையே ஏற்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு இந்த உலக சிறுகோள் தினமானது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 30 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. 


DOWNLOAD PDF 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!