ஆபத்தான நாய்களை வளர்க்க தடை – தமிழ்நாட்டில் அதிரடி உத்தரவு!!

0
ஆபத்தான நாய்களை வளர்க்க தடை - தமிழ்நாட்டில் அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் அனல் பறக்கும் தேர்தல் களம், அச்சமூட்டும் தேர்வு முடிவுகள் என ஒரு பக்கம் பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் சூழல் சென்று கொண்டிருக்க, தமிழக அரசு ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதாவது வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணி நாய்களில் ஆபத்தான இனம் கொண்டவை என்று சில வகை நாய்களை அடையாளப்படுத்தி உள்ளது.

செல்லப் பிராணிகளை வைத்திருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் வெவ்வேறு நாய் இனங்களை வளர்த்து வருகின்றனர். அதில் குறிப்பிட்ட 23 வகை நாய் இனங்களை அரசு ஆபத்தான நாய்கள் என்று வளர்க்க தடை விதித்துள்ளது. மேலும் இவ்வகை நாய்களை இறக்குமதி செய்வது, வளர்ப்பு பிராணிகளாக விற்பனை செய்வது உள்ளிட்ட அனைத்து செயல்களுக்கும் தடை விதித்து அறிக்கை வெளியிட்டு உள்ளது.

மேலும் இந்த நாய்களை தற்பொழுது வளர்ப்பு பிராணியாக வைத்திருந்தால், உடனடியாக அவற்றிற்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து, அவை இனப்பெருக்கம் செய்யாமல் தடுக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளது. அந்த நாய் இனங்களை கீழே காணலாம்.

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட நாய் இனங்கள்:

  • PITBULL TERRIER
  • TOSA INU
  • AMERICAN STAFFORDSHIRE TERRIER
  • FILA BRASILEIRO
  • DOGO ARGENTINO
  • AMERICAN BULL DOG
  • BOESBOEL,KANGAL
  • CENTRAL ASIAN SHEPHERD DOG
  • CAUCASIAN SHEPHERD DOG
  • SOUT RUSSIAN
  • SHEPHERD DOG
  • TORNJAK SARPLANINAC
  • JAPANESE TOSA
  • AKITA MASTTIFFS
  • ROTTWEILER
  • TERRIERS
  • RHODESIAN RIDGEBACK
  • WOLF DOGS
  • CANARIO
  • AKBASH
  • MOSCOW GUARD
  • CANE CORSO
  • BANDONG

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

TNPSC தேர்வர்களின் கவனத்திற்கு – தேர்வில் வெற்றி பெற இத தெரிஞ்சுக்கோங்க!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!