ஏப்ரல் 26ம் தேதி இங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை – அதிரடி நடவடிக்கை!

0
ஏப்ரல் 26ம் தேதி இங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை - அதிரடி நடவடிக்கை!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாட்டின் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஏப்ரல் 26 ஆம் தேதி அன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் எதிரொலி:

நாட்டின் மக்களவைத் தேர்தல் 19 ஆம் தேதி முதல் தொடங்கி மொத்தம் ஏழு கட்டங்களாக ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26 ஆம் தேதி அன்று நாடு முழுவதும் உள்ள 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 89 தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது.

இரண்டாம் கட்ட தேர்தலில் பல்வேறு நட்சத்திர வேட்பாளர்களும் போட்டியிடும் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC தேர்வு 2024 – பொதுத்தமிழ் இலக்கணம்.. சூப்பர் கேள்விகள் விடையுடன்!!

பட்டியல்:

1.அசாம் (5): கரீம்கஞ்ச், சில்சார், மங்கல்டோய், நவகோங், கலியாபோர்
2. பீகார் (5): கிஷன்கஞ்ச், கதிஹார், பூர்னியா, பாகல்பூர், பாங்கா
3. சத்தீஸ்கர் (3): ராஜ்நந்த்கான், மஹாசமுந்த், காங்கர்
4. ஜம்மு மற்றும் காஷ்மீர் ( 1): ஜம்மு
5. கர்நாடகா (14): உடுப்பி சிக்மகளூர், ஹாசன், தட்சிண கன்னடா, சித்ரதுர்கா, தும்கூர், மாண்டியா, மைசூர், சாமராஜநகர், பெங்களூரு ரூரல், பெங்களூரு வடக்கு, பெங்களூரு மத்திய, பெங்களூரு தெற்கு, சிக்கபல்லாபூர், கோலார்.
6. கேரளா (20): காசர்கோடு, கண்ணூர், வடகரா, வயநாடு, கோழிக்கோடு, மலப்புரம், பொன்னானி, பாலக்காடு, ஆலத்தூர், திருச்சூர், சாலக்குடி, எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா, மாவேலிக்கரா, பத்தனம்திட்டா, கொல்லம், அட்டிங்கல், திருவனந்தபுரம்.
7. மத்தியப் பிரதேசம் (7): திகம்கர், தமோஹ், கஜுராஹோ, சத்னா, ரேவா, ஹோஷங்காபாத், பெதுல்
8. மகாராஷ்டிரா (8): புல்தானா, அகோலா, அமராவதி (SC), வார்தா, யவத்மால்-வாஷிம், ஹிங்கோலி, நான்டெட், பர்பானி
9. மணிப்பூர் (1): வெளி மணிப்பூர்
10. ராஜஸ்தான் (13): டோங்க்-சவாய் மாதோபூர், அஜ்மீர், பாலி, ஜோத்பூர், பார்மர், ஜலோர், உதய்பூர், பன்ஸ்வாரா, சித்தோர்கர், ராஜ்சமந்த், பில்வாரா, கோட்டா, ஜலவர்-பரான்.
11. திரிபுரா (1): திரிபுரா கிழக்கு
12. உத்தரப் பிரதேசம் (8): அம்ரோஹா, மீரட், பாக்பத், காசியாபாத், கௌதம் புத்த நகர், அலிகார், மதுரா, புலந்த்ஷாஹர்.
13. மேற்கு வங்காளம் (3): டார்ஜிலிங், ராய்கஞ்ச், பலூர்காட்

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!