‘செம்பருத்தி’ ஷபானா திருமண விழாவில் ஜீ தமிழ் சீரியல் நடிகைகள் – வைரலாகும் வீடியோ!
ஜீ தமிழ் சீரியல்களில் தொடர்ந்து முதலிடம் பிடித்த செம்பருத்தி சீரியலில் பார்வதி கதாபாத்திரத்தில் நடித்த ஷபானா திருமணம் விழாவில் ரேஷ்மா நடனம் ஆடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை திருமணம்:
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் செம்பருத்தி. இந்த தொடர் பல வருடங்களாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதில் கதாநாயகியாக செம்பருத்தி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஷபானாவிற்கு இந்த தொடரின் மூலம் பல ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றனர். இவர் விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்த ஆர்யன் என்பவரை காதலித்து வருவதாகவும், நிச்சயதார்த்தம் முடிந்தது போல புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறும் இமான் அண்ணாச்சி – ரசிகர்கள் குமுறல்!
தற்போது இவர் எனக்கு இன்று திருமணம் அதனால் எனக்கு இதுவரை ஆதரவு கொடுத்த எனது ரசிகர்களின் ஆசீர்வாதங்கள் மற்றும் வாழ்த்துகளும் எனக்கு கண்டிப்பாக தேவை என்று திருமண கோலத்தில் அவர் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். மேலும் நான் செம்பருத்தி சீரியலை முடித்துவிட்டு சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு சென்று விடலாம் என்ற எண்ணத்தில் வந்தேன். ஆனால் கடவுளின் ப்ளான் நான் சென்னையில் செட்டில் ஆக வேண்டும் என்று உள்ளது.
பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறும் இமான் அண்ணாச்சி – ரசிகர்கள் குமுறல்!
இந்நிலையில் அவருக்கு திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு இருக்கின்றனர். ஜீ தமிழ் சீரியல் நடிகையான ரேஷ்மா ஷாபனாவின் திருமண விழாவிற்கு சென்றிருக்கிறார். அவருடன் இணைத்து நடனம் ஆடும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் ஷபானா செம அழகாக இருக்கிறார் என திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Happy marriage life I love you Sabana sister happy ya irukka👰👰