ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ சீரியல் ஷபானா சாதித்த கதை – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

0
ஜீ தமிழ் 'செம்பருத்தி' சீரியல் ஷபானா சாதித்த கதை - ரசிகர்கள் நெகிழ்ச்சி!
ஜீ தமிழ் 'செம்பருத்தி' சீரியல் ஷபானா சாதித்த கதை - ரசிகர்கள் நெகிழ்ச்சி!
ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ சீரியல் ஷபானா சாதித்த கதை – ரசிகர்கள் நெகிழ்ச்சி!

செம்பருத்தி சீரியலின் மூத்த மருமகளான பார்வதி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஷபானா தனது வாழ்க்கையில் கடந்து வந்த கஷ்டங்களை பற்றியும், தற்போது அடைந்துள்ள வெற்றியை பற்றியும் காண்போம்.

செம்பருத்தி ஷபானா:

சின்னத்திரையில் உள்ள சீரியல்கள் எல்லாம் தற்போது சினிமாவை மிஞ்சி விட்ட கதைக்களத்தில் வந்து கொண்டிருக்கிறது. அதிலும், சின்னத்திரை என்ற அளவை தாண்டி அதிக பிரமாண்டமாக ஹிந்தி சீரியல்களை போல் மெகா பங்களாவில் நடக்கும் தொடர் ஜீ தமிழின் செம்பருத்தி. இதில் ஜமீன் பரம்பரையை சேர்ந்தவராக பிரியா ராமன் நடித்துள்ளார். தனது ஜமீன் அந்தஸ்திற்கு தகுந்த பெண் தான் தனது மருமகளாக வர வேண்டும் என்று கொள்கை கொண்டவர்.

Reliance Jio vs BSNL வாடிக்கையாளர்களுக்கு தினசரி 3GB டேட்டா – முழு விபரம் இதோ!

இவரது வீட்டில் வேலை செய்யும் பார்வதிக்கும் இவரது மூத்த மகன் ஆதிக்கும் திருமணம் நடந்து விட அதன் பிறகு, அத்தனை தடைகளையும் தாண்டி அனைவர் மனதிலும் இடம் பிடிக்கும் படி நடித்துள்ளார். பார்வதி கதாபாத்திரத்தில் நடைக்கும் ஷபானா கேரளாவை சேர்ந்தவர். ஆனால் வளர்ந்தது, படித்தது எல்லாமே மும்பையில் தான். இவர் தனது சிறு வயதிலேயே தந்தையை பறிகொடுத்தவர். மும்பையில் உள்ள ஹோலி கிராஸ் கான்வென்ட் பள்ளியில் படித்த இவர், சிக்கிம் மணிப்பால் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். முதலில், 2016ல் சூர்யா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விஜயதசமி என்ற மலையாள தொலைக்காட்சி தொடரில் நடித்தார்.

தமிழகத்தில் பெண்களுக்கான இலவச அரசு பேருந்து பயணம் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

தமிழில் அறிமுகமான செம்பருத்தி தொடரில் தனது அசரடிக்கும் நடிப்பு திறமையால் பிரபலமாகிவிட்டார். இவர் திரைத்துறைக்கு நடிக்க வந்தது குடும்பத்தினர் யாருக்கும் பிடிக்கவில்லையாம். அப்போது அவரது அம்மா மட்டுமே துணையாக இருந்துள்ளார். மேலும், சீரியலில் பொட்டு வைத்து இந்து பெண்ணாக நடிப்பதும் காதல் காட்சிகளில் நடிப்பதும் குறித்து பல விமர்சனங்கள் வந்துள்ளது என்று அவரே தெரிவித்துள்ளார். இவை எல்லாவற்றையும் தனக்கு மிகவும் பிடித்த நடிப்பிற்காக தாண்டி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!