ATMல் பணம் எடுக்காமலேயே பேலன்ஸ் குறைந்துவிட்டதா? உடனே இதை பண்ணுங்க!! 

0
ATMல் பணம் எடுக்காமலேயே பேலன்ஸ் குறைந்துவிட்டதா? உடனே இதை பண்ணுங்க!! 
ஏடிஎம் மிஷினில் இருந்து பணத்தை கையில் எடுக்காமலேயே வங்கி கணக்கில் இருந்து பணம் கழிக்கப்படும் நேரத்தில் என்ன செய்து அந்த பணத்தை பெறுவது என்பது தொடர்பான முழு விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஏடிஎம் பணம்:

இந்தியாவில் தற்போது அதிகமாக ஆன்லைன் மூலமான பண பரிவர்த்தனை தான் இருந்து வருகிறது. சில சமயங்களில் மட்டுமே ஏடிஎம் மூலமாக பணத்தை பெற்று பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு ஏடிஎம் மூலமாக பணம் எடுக்கும்போது பல நேரங்களில் ஏடிஎம் மிஷினிலிருந்து பணம் வருவதில்லை. ஆனால், உங்களது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டு விட்டதாக குறுஞ்செய்தி வரும். இந்த சமயங்களில் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பான விளக்கத்தை இங்கு காணலாம்.

அதாவது, கையில் பணத்தை எடுக்காமலேயே உங்களது வங்கி கணக்கில் இருந்து பணம் கழிக்கப்பட்டால் ஐந்து நாட்களுக்குள் அந்த பணத்தை சம்மந்தப்பட்ட வங்கி உங்களுக்கு திரும்ப செலுத்த வேண்டும். இவ்வாறு, வங்கி உங்களுக்கு ஐந்து நாட்களுக்குள் பணத்தை திருப்பிக் கொடுக்காவிட்டால் ஒவ்வொரு நாட்களும் ரூ. 100 அபராதம் செலுத்த வேண்டும். அதற்கு முதலில் உங்களது வங்கி கிளைக்கு சென்று இது தொடர்பான புகாரை கொடுக்க வேண்டும். மேலும், உங்களுக்கு வந்துள்ள பணம் எடுக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி ஆகியவற்றை ஆதாரமாக பயன்படுத்தி நீங்கள் இழந்த தொகையை மீண்டும் பெற்றுக் கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!