WhatsApp பயன்படுத்துவோருக்கு இனி கட்டணம்? முக்கிய தகவல் வெளியீடு!

0
WhatsApp பயன்படுத்துவோருக்கு இனி கட்டணம்? முக்கிய தகவல் வெளியீடு!
WhatsApp பயன்படுத்துவோருக்கு இனி கட்டணம்? முக்கிய தகவல் வெளியீடு!
WhatsApp பயன்படுத்துவோருக்கு இனி கட்டணம்? முக்கிய தகவல் வெளியீடு!

WhatsAppயில் தற்போது இலவசமாக வீடியோ கால், வாய்ஸ் கால் உள்ளிட்டவை மேற்கொள்ள முடிகிறது. ஆனால் இனிமேல் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று ட்ராய் (TRAI) கோரிக்கை வைத்துள்ளது. இதனை பரிசீலனை செய்ய உள்ளதாக தொலைத்தொடர்பு நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

WhatsApp

உலகம் முழுவதும் WhatsApp செயலியை பில்லியன் கணக்கான பயனாளர்கள் பயன்படுத்துகின்றனர். மேலும் WhatsApp செயலியில் பயனாளிகளின் வசதிக்கேற்ப புதுப்புது வசதிகளை இந்நிறுவனம் அறிமுகம் செய்து வருவதால் நாளுக்கு நாள் இச்செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதையடுத்து இதன் மூலமாக இலவசமாக வீடியோ கால், வாய்ஸ் கால் உள்ளிட்டவை மேற்கொள்ளலாம். அத்துடன் வீடியோ, போட்டோ உள்ளிட்டவை மற்றவர்களுக்கு அனுப்ப முடியும். இதனால் இச்செயலியை சிறியவர் முதல் பெரியவர் வரை பயன்படுத்தி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து தற்போது இதில் இலவசமாக வீடியோ கால், வாய்ஸ் கால் மேற்கொள்வதற்கு பதிலாக தனிக்கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்று இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கோரிக்கை வைத்துள்ளது. மேலும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளிலும் அழைப்புகளை மேற்கொள்ள இனிமேல் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையானது கடந்த 2008ம் ஆண்டு முதல் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மீண்டும் 2016-17ம் ஆண்டும் மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது.

ராஜா ராணி2 சீரியல் நடிகருக்கு நடைபெற்ற திடீர் திருமணம் – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

மேலும் தற்போது நீண்ட காலத்திற்கு பிறகு இந்த கோரிக்கைக்கு அதிகமான விளக்கங்கள் தர வேண்டும் என்று வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை டாட் நிறுவனம் ஏற்கும்பொழுது, வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், கூகிள் டியோ, சிக்னல், மற்றும் டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளில் இலவசமாக வழங்கப்படும் அழைப்புகள் இனிமேல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதன் காரணமாக வாடிக்கையாளர்கள் அதிகப்படியான தொகையை செலுத்த முற்படுவார்கள். இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!