Mac பயனர்களுக்கான புதிய செயலி – WhatsApp அறிமுகம்!

0

Mac பயனர்களுக்கான புதிய செயலி – WhatsApp அறிமுகம்!

WhatsApp நிறுவனம் தற்போது Mac பயனர்களுக்கான புதிய செய்தியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பயணங்கள் பல்வேறு அம்சங்களை விரைவாக செய்ய உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்பின் புதிய செயலி:

WhatsApp செயலி தொடங்கப்பட்ட சமயத்தில் இருந்த அம்சங்களை காட்டிலும் தற்போது அனைத்து வகையிலும் பல்வேறு புதிய வகையான அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. இவை பயனர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நேரடி தொடர்பில்  இருப்பது போன்று அனுபவத்தை கொடுப்பதற்கான பல்வேறு அம்சங்களையும் வடிவமைத்துள்ளது. மேலும் பணப்பரிவர்த்தனை முதல் வணிக பயன்பாடு வரை அனைத்திற்குமான  பல்வேறு வசதிகள் வடிவமைக்கப்பட்டு பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது மேக் பயனர்களுக்கான WhatsApp புதிய செயலியை நேற்று அறிமுகம் செய்துள்ளது.

ஆதித்யா எல் 1 விண்கலம் விண்ணில் ஏவப்படுவதை நேரில் பார்க்க வேண்டுமா? உடனே புக் செய்யுங்க!

இந்த செயலியின் மூலம் பயனர்கள் இனி மேக்கில் இருந்து வீடியோ அழைப்புகளில் 8 பேர் வரையிலும் மற்றும் ஆடியோ அழைப்புகளில் 32 பேர் வரையிலும் குழு அழைப்புகளை இணைத்துக் கொள்ளலாம். குழு அழைப்புகள் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது பயனர்கள் அதில் இணைந்து கொள்ள முடியும். மேலும் அழைப்பிற்கான முழு வரலாற்றையும் அமுக்கவும்,  பயன்பாடு மூடப்பட்டிருந்தாலும் இன்கம்மிங் அழைப்புகளையும் திரையில் பெற முடியும் வகையில் இந்த புதிய செயலியானது மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து டிராக் செய்வதன் மூலம் மேக்கில் இருந்து பைல்களை மற்றவர்களுடன் எளிதாக பகிர்ந்து கொள்ள முடியும். இந்த புதிய செயலியானது இன்னும் ஆப் ஸ்டோருக்கு வரவில்லை. இதனை WhatsApp.com இல் இருந்து பயனர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!