தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை அறிக்கை!

0
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் - வானிலை அறிக்கை!
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் - வானிலை அறிக்கை!
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை அறிக்கை!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக பல மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், இன்று நீலகிரி, தேனி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வானிலை அறிக்கை:

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில்‌ இன்று நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன முதல்‌ மிக கன மழையும்‌, ஏனைய மேற்கு தொடர்ச்‌சி மலையை ஒட்டிய (திண்டுக்கல்‌, தென்காசி) மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ மிதமான மழையும்‌, திருநெல்வேலி, தூத்துக்குடி, ஈரோடு, சேலம்‌, மதுரை, விருதுநகர்‌, தர்மபுரி, நாமக்கல்‌, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌, எஞ்சிய மாவட்டங்களில்‌ பெரும்பாலும்‌ லேசான மழையும்‌ / வறண்ட வானிலையும்‌ நிலவக்‌ கூடும்‌.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு? ஸ்மார்ட் வகுப்புகள் மூலம் பாடங்கள்!

கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களின்‌ மலைப்பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.

25.07.2021: நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன மழையும்‌, ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (திண்டுக்கல்‌, தென்காசி) மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌
மிதமான மழையும்‌, திருநெல்வேலி, தூத்துக்குடி, ஈரோடு, சேலம்‌, மதுரை, விருதுநகர்‌, தர்மபுரி, நாமக்கல்‌, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ எஞ்சிய மாவட்டங்களில்‌ பெரும்பாலும்‌ லேசான மழையும்‌ / வறண்ட வானிலையும்‌ நிலவக்‌ கூடும்‌.

26.07.2021 முதல்‌ 28.07.2021: மேற்கு தொடர்ச்‌சி மலையை ஒட்டிய மாவட்டங்கள்‌, சேலம்‌, தர்மபுரி, நாமக்கல்‌, கள்ளக்குறிச்‌சி, பெரம்பலூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌, எஞ்சிய
மாவட்டங்களில்‌ பெரும்பாலும்‌ லேசான மழையும்‌ / வறண்ட வானிலையும்‌ நிலவக்‌ கூடும்‌.

4 அல்ல, 40 திருமணம் கூட நான் செய்து கொள்வேன் – வனிதா விஜயகுமார் பேட்டி!

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌, அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்‌சியஸை ஒட்டி இருக்கும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்கக்கடல்‌ பகுதிகள்‌:

24.07.2021: தமிழக கடலோரம்‌ மற்றும்‌ ஆந்திர கடலோர பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

24.07.2021 முதல்‌ 25.07.2021 வரை: மன்னார்‌ வளைகுடா பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

24.07.2021 முதல்‌ 26.07.2021 வரை: தெற்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ மத்திய வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ இடைஇடையே 60 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

ஆகஸ்ட் 1 முதல் வங்கி சேவைகளில் வரப்போகும் மாற்றங்கள் – ஊதியம் முதல் EMI வரை!

அரபிக்கடல்‌ பகுதிகள்‌:

24.07.2021 முதல்‌ 26.07.2021 வரை: கர்நாடகா, கேரளா கடலோர பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

24.07.2021 முதல்‌ 28.07.2021 வரை: தென்‌ மேற்கு அரபிக்கடல்‌, மத்திய அரபிக்கடல்‌ மற்றும்‌ வடக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ இடைஇடையே 60 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

மீனவர்கள்‌ மேற்குறிப்பிட்ட தேதிகளில்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!