தமிழக பள்ளிக் கல்வித்துறையில் 1272 பணியிடங்கள் – ஊதிய நீட்டிப்பு ஆணை!

0
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் 1272 பணியிடங்கள் - ஊதிய நீட்டிப்பு ஆணை!
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் 1272 பணியிடங்கள் - ஊதிய நீட்டிப்பு ஆணை!
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் 1272 பணியிடங்கள் – ஊதிய நீட்டிப்பு ஆணை!

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியரல்லாத பணியிடங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 2021 ஏப்ரல் மாத ஊதியம் நீடித்து வழங்கப்படுவதுவது தொடர்பாக தமிழக அரசு ஆணை ஒன்றை பிறப்பித்துள்ளது.

அரசு ஆணை:

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியரல்லாத 5000 பணிகள் புதிதாக தோற்றுவிக்கப்பட்டது. அதில் தற்போது, 1272 பணியாளர்கள் பணிப்புரிந்து வருகின்றனர். இந்த பணியாளர்களுக்கு 2021 ஏப்ரல் மாதத்திற்கான ஊதியம் நீடிப்பது தொடர்பாக அரசு முதன்மை கல்வி அலுவலர் மாவட்ட கருவூலக அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பியுள்ளார்.

தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா – கூடுதல் பொறுப்பு வழங்கல்!!

அந்த அறிக்கையில், அரசு ஊதியம் தொடர்பாக வெளியிட்டுள்ள அரசாணையை சுட்டிக்காட்டி கூறப்பட்டுள்ளது. அதன்படி, முதல் ஆணையின் படி, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு 2999 துப்புரவாளர் பணியிடங்களுக்கு ரூ.1300 -300 + ரூ.300 தர ஊதியம் என்ற சிறப்பு கால முறை ஊதிய விகிதத்திலும், 2001 காவலர் பணியிடங்கள் ரூ.4800 -10,000 +ரூ.1,300 தரவூதியம் என்று கால முறை ஊதிய விகிதத்திலும் மொத்தம் 5000 பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டன.

இந்த 5000 பணி இடங்களுக்கான 1.1.2018 முதல் 31.1.2020 வரை தொடர் நீட்டிப்பு வழங்கி ஆணை வெளியிடப்பது. அரசாணையின் படி, 2999 சிறப்பு காலமுறை துப்புரவாளர் பணியிடங்களில் நிரப்பப்பட்ட 2213 துப்புரவு பணியாளர்களில் அவ்வமயம் பணியிலிருந்த 1692 நபர்களுக்கு மட்டும், அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் கருத்தியலாக ரூ. 4,800 – 10,000 + 1,300 என்ற காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்து வழங்கப்பட்ட அரசாணையின் படி, மேற்படி 1692 பணியாளர்களில் 2 பணியாளர்களின் பெயர்கள் நீக்கம் செய்து திருத்தம் செய்யப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

தோற்றுவிக்கப்பட்ட பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு 31.1.2020 ல் முடிவடைந்த நிலையில், அப்பணியிடங்களுக்கான பணியாளர்களது பணியிடங்களுக்கு மட்டும் 1.1.2021 முதல் 31.12.2023 வரை தொடர் நீட்டிப்பு ஆணை வழங்குமாறு பள்ளிக்கல்வி இயக்குனர் கேட்டுக்கொண்டார். மேலும், 1272 பணியாளர்களுக்கான ஏப்ரல் 2021 ஊதியம் பெறத் தக்க வகையில் ஊதிய கொடுப்பாணை வழங்குமாறு பள்ளிக்கு கல்வி இயக்குனர் கோரியுள்ளார். மேலும், 778 துப்புரவாளர் மற்றும் 494 இரவு காவலர் ஆக மொத்தம் 1272 பணியாளர்களது தொடர் நீட்டிப்பு அரசின் பரிசீலனையில் உள்ளது.

இந்நிலையில் பள்ளிக் கல்வி இயக்குனரின் கோரிக்கையின் படி, தோற்றுவிக்கப்பட்ட 5000 பணியிடங்களில் பணியாற்றும் 1272 பணியாளர்களுக்கான 2021 ஏப்ரல் மாத ஊதியம் பெறத்தக்க வகையில் ஊதிய கொடுப்பாணை வழங்கப்படுகிறது. மேலும், இவர்களுக்கான இதர படிகளுக்கான பட்டியல் உரிய அலுவலர்களால் தாக்கல் செய்யப்படும் போது ஏனைய இனங்களில் அவை சரியாக இருக்கும் நிலையில் அதனை ஏற்று சம்பளம் அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது இவ்வாறு அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!