கொரோனா தடுப்பு பணிக்கு தன்னார்வலர்கள் தேவை – மாவட்ட ஆட்சியர் அழைப்பு!

0
கொரோனா தடுப்பு பணிக்கு தன்னார்வலர்கள் தேவை - மாவட்ட ஆட்சியர் அழைப்பு!
கொரோனா தடுப்பு பணிக்கு தன்னார்வலர்கள் தேவை - மாவட்ட ஆட்சியர் அழைப்பு!
கொரோனா தடுப்பு பணிக்கு தன்னார்வலர்கள் தேவை – மாவட்ட ஆட்சியர் அழைப்பு!

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு உதவிட விரும்பும் தன்னார்வலர்கள் இணையத்தில் பதிவு செய்து பணியில் ஈடுபடலாம் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

தன்னார்வலர்கள் தேவை:

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக மற்றும் கொரோனா நோயாளிகளுக்கு உதவிடும் வகையில் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் தமிழக அரசு அமைத்துள்ள ஒருங்கிணைப்பு குழுக்களுடன் இணைந்து பணியாற்றும் வகையில் தன்னார்வலர்களுக்கு என்று மாநில மற்றும் மாவட்ட அளவிலான அறிவிப்புகளை முன்னரே வெளியிட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியீடு – ஜூலை 1க்குள் தடுப்பூசி கட்டாயம்!

சேலம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்கு பணியாற்றும் குழுக்களுடன் இணைந்து உதவிட தன்னார்வலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்களது பெயர் மற்றும் முகவரி போன்ற விவரங்களை மாநில குழுவிற்கு பதிவு செய்யும் போது, [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் பதிவு செய்ய வேண்டும். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்களுக்கு பதிவு செய்வதற்கு http://ucc.uhcitp.in/ngoregistration என்ற இணையதளத்திலும் பதிவு செய்ய வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

தன்னார்வலர்கள் தங்களால் இயன்ற வகையில், குழந்தைகள் முதல் முதியவர் வரை பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, உணவு, ரேஷன் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் வாகன உதவி போன்ற பணிகளை அரசு அலுவலர்களுடன் இணைந்து செய்யலாம். இது குறித்த அதிக தகவல்களை அறிய விரும்பினால் அறை எண் 126, முதல் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சேலம். தொலைபேசி எண் – 0427 2413213 மற்றும் [email protected] என்ற முகவரியில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!