விஜய் டிவி “தமிழும் சரஸ்வதியும்” திருமண வைபோக பத்திரிகை – வைரலாகும் பதிவு! கலாய்த்த நெட்டிசன்கள்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "தமிழும் சரஸ்வதியும்" திருமண வைபோக பத்திரிகை - வைரலாகும் பதிவு! கலாய்த்த நெட்டிசன்கள்!
விஜய் டிவி “தமிழும் சரஸ்வதியும்” திருமண வைபோக பத்திரிகை – வைரலாகும் பதிவு! கலாய்த்த நெட்டிசன்கள்!

விஜய் டிவி “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் திருமண வைபோகம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருமண பத்திரிகை சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்ட நிலையில் அதை பார்த்த நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

தமிழும் சரஸ்வதியும் திருமணம்:

விஜய் டிவி சீரியல் என்றாலே அதில் புதுமை குறையாமல் இருக்கும் அந்த வகையில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் “தமிழும் சரஸ்வதியும்” சீரியல் பார்க்க ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். பல தடைகளை தாண்டி தமிழ் மற்றும் சரஸ்வதியின் காதல் திருமணம் பெரியவர்கள் சம்மதத்துடன் நடைபெற இருக்கிறது. அதில் சரஸ்வதி படிப்பை மறைத்து தான் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது. அந்த உண்மையை வெளியே சொல்ல வேண்டும் என சந்திரகலா பல திட்டங்களை தீட்டுகிறார்.

TN Job “FB  Group” Join Now

அதை எல்லாம் மீறி திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது. மேலும் திருமணத்தில் நிஜ திருமணம் போல தமிழ் – சரஸ்வதி கல்யாண பத்திரிக்கையை விஜய் டிவி குழு சமூகவலைத்தள பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களை திருமண எபிசோடுக்கு வரவேற்று இருந்தது. புது விதமாக சீரியல் குழுவினர் தரப்பில் இருந்து செய்து இருந்தாலும், இதை பார்த்த நெட்டிசன்கள் பலர் கலாய்த்து வருகின்றனர். அதில் சிறந்த கமெண்ட்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

தமிழக மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – அமைச்சர் வலியுறுத்தல்!

திருமண பத்திரிகையை பார்த்த சிலர், “செவ்வாய்க்கிழமை அதுவுமா கல்யாணம் நடத்தலாமா முறையே சரியில்லை” என கிண்டல் செய்ய தொடங்கிவிட்டனர். இன்னும் சிலர், இந்த கல்யாணத்திற்கு தீபக்கின் மனைவியும், நக்‌ஷத்ராவின் கணவரும் வருவார்களா” என கலாய்த்து வருகின்றனர். மேலும் ஒரு சிலர் சீரியலாக இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா என ஏகப்பட்ட கமெண்ட்ஸ் செய்து இருக்கின்றனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here