விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இனி தனமாக களமிறங்கும் பிரபல நடிகை – ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் நல்ல ஒரு குடும்ப சீரியலுக்கு எடுத்துக்காட்டாய் இருக்கிறது. இந்த சீரியலில் தனமாக நடித்து வரும் சுஜிதா சீரியலில் இருந்து விலக இருப்பதாகவும், அவருக்கு பதிலாக பாக்கியலட்சுமி நடிகை களமிறங்க இருப்பதாகவும் தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குடும்பக் கதையை மையப்படுத்தி தினசரி எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரமான தனம் கதாபாத்திரத்தில் நடிகை சுஜிதா நடித்து வருகிறார். கூட்டுக் குடும்பத்தின் ஒற்றுமை கலையாமல் வழிநடத்தி செல்லும் முக்கிய கதாபாத்திரமாக தனம் கதாபாத்திரம் இருக்கிறது. மூத்த அண்ணியாக அவருடைய பொறுப்புகளை சரியாக கவனித்து வருகிறார். இந்நிலையில் தனமாக இனி சுஜிதா நடிக்கப் போவதில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
அவருக்கு பதிலாக பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் சுசித்ரா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது கதை சிறிது சிறிதாக அடுத்தகட்டத்துக்கு நகர்ந்து கொண்டு இருக்கிறது. மீனாவின் அப்பா குடும்பத்தை பிரிக்கும் வில்லனாக மாறி வருகிறார். அதனால் கதையில் சுவாரசியம் அதிகமாக ஆனால், இது போல பல தடைகள் வந்தாலும் அண்ணன் தம்பிகளின் பாசத்தால் அதை எல்லாம் வென்று இருக்கின்றனர்.
பாரதி கண்ணம்மா சீரியல் கண்ணம்மா வினுஷாவின் புது கெட்அப் – ரசிகர்கள் உற்சாகம்!
அதனால் இனிமேல் தான் சீரியலில் விறுவிறுப்பு அதிகமாகும் என்பதால் தற்போது தனம் கதாபாத்திரத்தின் மாற்றத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். மேலும் பாக்கியலட்சுமி சீரியலில் இனி ராதிகா தான் நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் வைரலாகி வருவதால் ரசிகர்கள் உண்மையாக இருக்குமோ என்று வருத்தத்தில் இருக்கின்றனர். ஆனால் இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பதால் ரசிகர்கள் சற்று நிம்மதியில் இருக்கின்றனர்.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்