![ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த விஜய் டிவி ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த விஜய் டிவி](https://tamil.examsdaily.in/wp-content/uploads/2023/02/ட்ரெண்டிங்கில்-நம்பர்-ஒன்-இடத்தை-பிடித்த-விஜய்-டிவி.jpg)
ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் – ரசிகர்கள் வாழ்த்து!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தற்போது வெறும் சந்தோஷமான காட்சிகள் மட்டுமே காட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் முதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ப்ரோமோ ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
தமிழ் சின்னத்திரையில் நல்ல ஒரு குடும்பக் கதைக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலின் சிறப்பே நெகடிவ் ரோல் எதுவும் இல்லாமல் இருப்பது தான். வழக்கமான சீரியல்களை போல பழி வாங்குவது உள்ளிட்ட எந்த காட்சிகளும் இல்லாமல், குடும்பம், பாசம், அன்பு என்பதை மட்டுமே மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இந்த சீரியலில் தற்போது குடும்பத்தில் மூன்று பேர் கர்ப்பமாக இருப்பது போல காட்டப்படுகிறது.
விரைவில் முடிவுக்கு வரும் சன் டிவியின் டாப் சீரியல் – வெளியான இறுதி நாள் புகைப்படம்! ரசிகர்கள் ஷாக்!
மூத்த அண்ணன் தனக்கு குழந்தை பிறக்க போகிறது என சொல்லாமல் தவித்து வருவது எல்லாம் நகைச்சுவை கலந்து இருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியலின் ப்ரோமோ கடந்த வாரம் வெளியான நிலையில் அது தற்போது ட்ரெண்டிங்கில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. அதனால் ரசிகர்கள் வாழ்த்துக்களை கமெண்ட் மூலம் தெரிவித்து வருகின்றனர். இந்த சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தாலும், முன்னர் போல கதையில் எந்தவித சுவாரசியமான காட்சிகளும் இல்லை. அதனால் ரசிகர்கள் கதையில் எதாவது திருப்பம் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.