விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியல் வினுஷாவிற்கு இன்று பிறந்தநாள் – குவியும் லைக்குகள்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் தற்போது புதிதாக கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் வினுஷா தேவிக்கு இன்று பிறந்தநாள். அதனால் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பாரதி கண்ணம்மா:
விஜய் டிவி சீரியல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அதில் பாரதி கண்ணம்மா சீரியல் முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியல் கண்ணம்மா பாரதியை சுற்றியே கதை சென்று கொண்டிருக்கிறது. பாரதி கண்ணம்மாவும் 8 வருடங்களாக பிரிய தற்போது சேர்ந்து வாழ வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை சாதகமாக பயன்படுத்தி பாரதி கண்ணம்மா மற்றும் அவரது குழந்தையை ஏற்றுக் கொள்வாரா என்பதே கதையின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.
இந்த சீரியலில் இளம் வில்லியாக வெண்பா கதாபாத்திரத்தில் நடிகை பரீனா நடித்து வருகிறார். பாரதி கதாபாத்திரத்தில் அருண் பிரசாத் என்பவர் நடித்து வருகிறார். கண்ணம்மா கதாபாத்திரத்தில் 2 ஆண்டுகளாக ரோஷினி ஹரிபிரியன் நடித்து வந்தார். ஆனால் சில சொந்த காரணங்களால் அவர் சீரியலை விட்டு விலக இருப்பதாக தெரிவித்தார். அதனால் ரசிகர்கள் சீரியல் நிறுத்தப்படுமா என அதிர்ச்சியில் இருந்தனர். ஆனால் ரோஷினிக்கு பதிலாக கண்ணம்மா கதாபாத்திரத்தில் வினுஷா தேவி நடிக்க தொடங்கினார்.
அவரும் ரோஷினி போலவே இருப்பதால் ரசிகர்கள் அவரை கண்ணம்மாவாக ஏற்றுக் கொண்டுள்ளனர். மேலும் பழைய கண்ணம்மா சீரியலில் இருந்து விலகிய பின் TRP இல் பெரிய சரிவு ஏற்பட்டது. ஆனால் புதிய கண்ணம்மாவாக வினுஷா நடிக்க தொடங்கி TRPயை மீண்டும் அதிகரித்து பாரதி கண்ணம்மா சீரியலை முதலிடத்திற்கு கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் புதிய கண்ணம்மா வினுஷாவிற்கு இன்று பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.