Home Entertainment அம்ரிதாவை திருமணம் செய்யப்போகும் எழில், பாக்கியாவிற்கு விவாகரத்து வழங்கும் கோபி – சீரியலில் அடுத்த திருப்பம்!

அம்ரிதாவை திருமணம் செய்யப்போகும் எழில், பாக்கியாவிற்கு விவாகரத்து வழங்கும் கோபி – சீரியலில் அடுத்த திருப்பம்!

0
அம்ரிதாவை திருமணம் செய்யப்போகும் எழில், பாக்கியாவிற்கு விவாகரத்து வழங்கும் கோபி – சீரியலில் அடுத்த திருப்பம்!
அம்ரிதாவை திருமணம் செய்யப்போகும் எழில், பாக்கியாவிற்கு விவாகரத்து வழங்கும் கோபி - சீரியலில் அடுத்த திருப்பம்!
அம்ரிதாவை திருமணம் செய்யப்போகும் எழில், பாக்கியாவிற்கு விவாகரத்து வழங்கும் கோபி – சீரியலில் அடுத்த திருப்பம்!

பாக்கியாவை எப்படியாவது விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்துகொள்ளும் முயற்சியில் கோபி இருக்கிறார். இந்நிலையில் அம்ரிதாவை எழில் இரண்டாம் திருமணம் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாக்கியலட்சுமி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர் மக்களால் அதிகமாக விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது. தன்னை கண்ணும் கருத்துமாக பார்த்து கொண்டிருக்கும் பாக்கியாவை விட்டு எப்படியாவது விலகி விட வேண்டும் என கோபி முயற்சி செய்து கொண்டிருக்கிறார். குடும்பத்தில் உள்ள அனைவரின் கண்ணிலும் மண்ணை அள்ளி போட்டுவிட்டு மறைமுகமாக ராதிகாவை காதலித்து வருகிறார். இவரின் காதலுக்கு இடையூறாக இருக்கும் பாக்கியாவை விவாகரத்து செய்துவிட வேண்டும் என கோபி முடிவெடுகிறார்.

கீழே விழும் லட்சுமியை பார்த்து சிரிக்கும் கண்ணம்மா வினுஷா – வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ!

இதனால் பாக்கியாவிற்கு தெரியாமலேயே பாக்கியாவிடம் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கிவிடுகிறார். இதன் பின்பு பாக்கியாவும் கோபியும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றத்தில் இருந்து நோட்டீஸ் வந்துள்ளது. பாக்கியாவிடம் பொய் சொல்லி ஏமாற்றிவிட்டு நீதிமன்றத்திற்கு கோபி அழைத்து செல்கிறார். தனக்கு விவாகரத்து ஆகப் போகிறது என்பது கூட அறியாமல் அங்கு விவகாரத்துக்காக வந்திருப்பவர்களை பார்த்து பரிதாபமடைகிறார். இதன் பின்பு அனைத்து உண்மைகளும் பாக்கியாவிற்கு தெரிந்துவிட்டால் வீட்டில் மிகப் பெரிய பிரச்சனை ஏற்படும் என பயந்து பாக்கியாவை வீட்டிற்கு அனுப்பி விடுகிறார்.

இந்நிலையில், பாக்கியாவின் இரண்டாவது மகனான எழில், அமிர்தாவை திருமணம் செய்ய பிளான் போட்டு கொண்டிருக்கிறார். ஒரு புறம் பாக்கியாவை விவாகரத்து செய்ய கோபி முயற்சி செய்ய, மறுபுறம் அமிர்தாவை இரண்டாம் திருமணம் செய்துகொள்ள எழில் முயற்சி செய்து வருகிறார். இனி வரும் எபிசோடுகளில் எழில் அமிர்தாவை திருமணம் செய்ய போகிறாரா என்பது தான் ஒளிபரப்பாக இருக்கிறது. ரசிகர்கள், எழிலுக்கும் அமிர்தாவுக்கும் திருமணம் நடக்குமா மற்றும் கோபிக்கும் பாக்கியாவிற்கும் விவாகரத்து ஆகுமா என எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.

TNPSC Online Classes

[table id=1078 /]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here