பாக்கியலட்சுமி’ சீரியலில் கோபியாக நடிப்பவர் யார் தெரியுமா? ரசிகர்களை ஷாக் ஆக்கிய தகவல்கள்!
பாக்கியலட்சுமி தொடரில் கோபி கதாபாத்திரத்தில் நடித்து வரும் சதிஷ் குறித்தான உண்மை தகவல்கள் பல வெளியாகியுள்ளன. இத்தனை திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்துள்ளாரா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பாக்கியலட்சுமி:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் மக்களால் அதிகமாக விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது. இந்த தொடரில் பாக்கியாவின் கணவராக நடித்துவரும் கோபி அனைவராலும் விரும்பப்படும் விரும்பப்படும் நடிகராகி விட்டார். இவரது நடிப்பால் மட்டுமே பாக்கியலட்சுமி தொடரே வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது என்று கூட சொல்லலாம். இவரின் உண்மையான பெயர் சதிஷ். சென்னையில் பிறந்த இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையில் பயின்றார்.
நாக சைதன்யாவுடன் மீண்டும் சேரும் நடிகை சமந்தா? ரசிகர்களுக்கு பகீர் தகவல்!
ஏகப்பட்ட திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். திரைப்படங்களில் மட்டுமல்லாமல் மாடலிங் துறையிலும், விளம்பர படங்களில் கூட நடித்திருக்கிறார். 1999 ஆம் ஆண்டில் வெளியான மின்சார பூவே என்கிற திரைப்படத்தின் மூலமாகவே கதாநாயனாக அறிமுகமானார். இவர் நடித்த ராமானுஜத்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் இவருக்கு மிக பெரிய பேரையும் புகழையும் கொடுத்தது. இதனை தொடர்ந்து எம்.ஜி.ஆர் ன் வாழ்க்கை வரலாறு திரைப்படத்திலேயும் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் தொடங்கி வைத்தார்.
சர்வதேச மகளிர் தினம் (மார்ச் 8) கொண்டாட யார் காரணம் தெரியுமா? முழு விபரங்கள் இதோ!
இருமுகன் மற்றும் தனிஒருவன் திரைப்படத்திலேயும் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். இதற்கு பிறகு தான் மந்திரவாசல், சூலம், ஆனந்தம், கல்யாண பரிசு, மகாராணி மற்றும் பல சீரியல்களில் நடித்துள்ளார். இந்த சீரியல்களை தொடர்ந்து தான் சதீஸ்க்கு பாக்கியலட்சுமி தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவரது முக பாவனைகள் அனைத்தையுமே மக்கள் அதிகமாக விரும்பி பார்த்து வருகின்றனர். பாக்கியலட்சுமி சீரியல் தான் டிஆர்பியிலும் முன்னிலையில் இருந்து வருகிறது.