ஜெனி நிலாவை கொஞ்சியதால் கோவப்பட்ட செழியன், பாக்கியாவிற்கு கிடைத்த கேட்டரிங் ஆர்டர் – இன்றைய எபிசோட்!

0
ஜெனி நிலாவை கொஞ்சியதால் கோவப்பட்ட செழியன், பாக்கியாவிற்கு கிடைத்த கேட்டரிங் ஆர்டர் - இன்றைய எபிசோட்!
ஜெனி நிலாவை கொஞ்சியதால் கோவப்பட்ட செழியன், பாக்கியாவிற்கு கிடைத்த கேட்டரிங் ஆர்டர் – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ஈஸ்வரிக்கு அமிர்தா காபி கொடுக்க, ஈஸ்வரி அவரை கண்டபடி திட்டுகிறார். பின் பாக்கியா மேனேஜரிடம் இருந்து கேட்டரிங் ஆர்டர் வாங்க கெஞ்சுகிறார்.

பாக்கியலட்சுமி

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், ஈஸ்வரி அமிர்தா காபி கொடுத்ததும் பயங்கரமாக திட்டுகிறார். பாக்கியா வெளியே சென்றால் அவளே காபி போட்டு வைத்துவிட்டு செல்ல வேண்டும். இல்லை என்றால் எனக்கு காபியே வேண்டாம். இன்னொரு முறை இப்படி என் முன்னே நாடகம் போட்டு நிற்காதே என சொல்கிறார். பின் ஜெனி நான் தான் காபி கொடுக்க சொன்னேன் என சொல்ல, ஈஸ்வரி எதுவும் பேசாமல் கிளம்புகிறார். அதன் பின் எழில் காபி கப்பை எடுக்க செல்ல, அமிர்தா நான் எடுக்குறேன் என சொல்கிறார். பின் எழில் அமிர்தாவிடம் மன்னிப்பு கேட்கிறார்.

தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை – முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!!

ஆனால் அமிர்தா இதெல்லாம் நடக்கும் என எனக்கு முன்னதாகவே தெரியும் என சொல்கிறார். பின் ஜெனி வந்து அமிர்தாவிடம் சாரி கேட்கிறார். பாட்டி திட்டுவார்கள் என எனக்கு தெரியும் ஆனால் இப்படி காபியை தட்டிவிடுவார் என எனக்கு தெரியாது என சொல்கிறார். பின் அமிர்தா பாட்டி மனம் மாறும் நான் காத்திருக்கிறேன் என சொல்கிறார். பின் ஜெனி நிலாவை தூக்கி கொண்டு செல்ல, ஆனால் அமிர்தா நிலாவை இந்த நேரத்தில் தூக்க கூடாது என சொல்கிறார். ஜெனி நிலாவை நான் பார்த்துக் கொள்கிறேன் என சொல்கிறார்.

மறுபக்கம் பாக்கியா ராஜசேகர் சாரை பார்க்க வருகிறார். அப்போது மேனேஜர் வர இந்த வாரம் முழுவதும் கல்யாணம் இருப்பதாக சொல்கிறார். அப்போது மேனேஜர் எல்லாம் பெரிய நிகழ்ச்சி நீங்க செய்வீர்களா என கேட்க, பாக்கியா நாங்க சமாளித்துவிடுவோம் என சொல்கிறார். உங்களால் முடியாது என்பதால் 2 3 கல்யாணம் மட்டும் பண்ணுங்க என சொல்ல, ஆனால் பாக்கியா எங்களால் முடியும் என சொல்கிறார். மேனேஜர் முடியாது என சொல்ல, ஆனால் பாக்கியா எங்களால் முடியும் என சொல்கிறார், பின் ராஜாசேகர் யோசித்து முடிவு பண்ணுங்க என சொல்கிறார்.

பின் ஜெனி நிலாவை கொஞ்சி கொண்டிருக்க செழியன் இந்த நேரத்தில் ஏன் குழந்தையை தூக்குகிறாய் என கேட்கிறார். உடனே ஜெனி இவள் அவ்வளவு கனம் இல்லை என சொல்கிறார். செழியன் அதெல்லாம் தூக்க கூடாது என சொல்ல, உடனே ஜெனி முதல் குழந்தை இருப்பவர்கள் இரண்டாவது குழந்தையை தூக்கமாட்டார்களா என கேட்கிறார். பின் செழியன் அந்த பாப்பாவை கூட்டிக் கொண்டு போ என சொல்ல, ஏன் கூட்டிக் கொண்டு போக வேண்டும். நீயும் பேசமாட்டாய் என ஜெனி சொல்லிவிட்டு, நிலாவை கொஞ்சுகிறார் ஜெனி.

Follow our Instagram for more Latest Updates

செழியனை பெரியப்பா என சொல்ல, நான் பெரியம்மா என ஜெனி சொல்கிறார். செழியனுக்கு அதெல்லாம் பிடிக்காமல் இருக்க, ஜெனி அதை கண்டுகொள்வதாக இல்லை. பின் பாக்கியா கேட்டரிங் ஆர்டர் பற்றி நினைக்க செல்வி நிலாவை தூக்கி கொஞ்ச செல்கிறார். ஜெனி நிலா இருப்பது நன்றாக இருப்பதாக சொல்கிறார். பின் அமிர்தா வர ஜெனி நிலா ரொம்ப சமத்து என சொல்கிறார். பின் அமிர்தா செல்வி நன்றாக ஜாலியாக பேசுவதாக சொல்கிறார். பின் பாக்கியா வந்து நிலாவை கொஞ்சுகிறார். அப்போது பாக்கியா கேட்டரிங் ஆர்டர் பற்றி சொல்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!