கோபியை ராதிகா உடன் பார்த்த கண்ணன், சண்டைக்கு வந்த மூர்த்தி – இன்றைய “மகா சங்கமம்” எபிசோட்!

0
கோபியை ராதிகா உடன் பார்த்த கண்ணன், சண்டைக்கு வந்த மூர்த்தி - இன்றைய
கோபியை ராதிகா உடன் பார்த்த கண்ணன், சண்டைக்கு வந்த மூர்த்தி - இன்றைய "மகா சங்கமம்" எபிசோட்!
கோபியை ராதிகா உடன் பார்த்த கண்ணன், சண்டைக்கு வந்த மூர்த்தி – இன்றைய “மகா சங்கமம்” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” மற்றும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மூர்த்தி குடும்பமும் பாக்கியா குடும்பமும் சுத்தி பார்க்க செல்கின்றனர். அப்போது கண்ணன் ரூமில் இருக்க, கோபியை பார்த்துவிடுகிறார். அவருடன் ராதிகா இருப்பதை பார்த்து கண்ணன் அதிர்ச்சி அடைகிறார்.

மகா சங்கமம்

இன்று “மகா சங்கமம்” சீரியலில் மூர்த்தி குடும்பமும் பாக்கியா குடும்பமும் இணைந்து சுற்றி பார்க்க செல்கின்றனர். அப்போது கண்ணன் தலை வலிப்பதாக சொல்லிவிட்டு ரூமில் தூங்க செல்கிறார். பின் அனைவரும் கண்ணனை விட்டு கிளம்புகிறார்கள். மறுபக்கம் மீனா வீட்டில் கயலுக்கு சாப்பாடு ஊட்டிவிட ஆனால் கயல் சாப்பிடாமல் இருக்கிறார். அப்போது மீனா கயலை திட்ட ஜீவா வந்து ஏன் என் புள்ளையை திட்டுகிறாய் என கேட்கிறார். உடனே மீனா சாப்பிடாமல் இருக்க, ஜீவா கயலுக்கு ஊட்டிவிடுகிறார். உடனே கயல் சாப்பிடுகிறாள். பின் மீனா உன் கூட இருக்கலாம் என தான் நான் வீட்டில் இருக்கேன் என சொன்னேன். ஆனால் நீ கடையில் இருக்கிறாய் என சொல்கிறார்.

அவர்கள் எல்லாரும் கொடைக்கானல் சென்றுவிட்டார்களா என கேட்க ஆமாம் என சொல்கிறார். பின் மீனா ஒருவார்த்தை எனக்கு போன் செய்யவில்லை என கேட்க, செய்ததாக சொல்கிறார் ஜீவா. மறுபக்கம் குடும்பத்தினர் அனைவரும் போட்டோ எடுத்து சந்தோசமாக இருக்க, மறுபக்கம் மீனா ஜீவாவிடம் சினிமாவிற்கு போவோமா என கேட்க, கடைக்கு போகணும் சாப்பாடு கொடு என சொல்கிறார். மீனா சாதாரண பருப்பு சோறு கொடுக்க ஜீவாவிற்கு பிடிக்காமல் சாப்பிடுகிறார். மறுபக்கம் பாக்கியா முல்லைக்கு எதாவது விசேஷம் இருக்கிறதா என கேட்க, தனம் இல்லை என சொல்கிறார். அப்போது தனம் முல்லை கதிர் வீட்டில் இல்லை என சொல்லி நடந்ததை பற்றி சொல்கிறார்.

பாக்கியா அதை கேட்டு வருத்தப்படுகிறார். மறுபக்கம் ராதிகாவும் கோபியும் பேசிக் கொண்டிருக்க, மூர்த்தி போன் செய்கிறார். ஆனால் கோபி போனை எடுக்கவில்லை. பின் கண்ணன் தூங்கி எழுந்து வெளியே வந்து பார்க்க அங்கே கோபி இருக்கிறார். உடனே மாமா என கத்தி கொண்டு கண்ணன் செல்ல, எங்கே உங்க ரூம் என கேட்டு கோபி ரூமை பார்க்க செல்கிறார். உங்க ரூம் பெரியதாக இருப்பதாக சொல்ல, அப்போது ராதிகா வருகிறார். இது ராதிகா தான, என் அக்காவிற்கு துரோகம் செய்கிறீர்களா உங்களை என்ன செய்கிறேன் என பாருங்கள் என சொல்லிவிட்டு கண்ணன் கிளம்பி செல்கிறார். பின் ராதிகா இதற்கு தான் சொந்தங்களை அழைத்து கல்யாணம் செய்ய வேண்டும் என சொன்னோம். எதாவது பிரச்சனை வந்தால் நான் சும்மா இருக்கமாட்டேன் என சொல்கிறார்.

கோபி என்னை இங்கே வந்தும் நிம்மதியாக இருக்கவிடமாட்டேங்குறாங்க, காலையில் எழிலை பார்த்தோம் இப்போது இவன், அப்போ இரு கூட்டமும் ஒன்றாக இருக்காங்க போல என கோபி பதட்டமடைகிறார். கண்ணன் வேகமாக ஓடி வர, எல்லாரும் என்ன ஆச்சு என கேட்கிறார்கள். கண்ணன் பாக்கியாவை அணைத்து வருத்தப்பட்டு பேசுகிறார். தனம் என்ன ஆச்சு என கேட்க, கோபி மாமா நம்ம அக்காவை ஏமாற்றுவதாக கண்ணன் சொல்கிறார். எல்லாரும் அதை கேட்டு பதட்டமடைய, மறுபக்கம் கோபி ராதிகாவிடம் மன்னிப்பு கேட்கிறார். ஆனால் ராதிகா கோபியை பயங்கரமாக அடிக்கிறார். கண்ணன் மூர்த்தி எழில் உடன் ரூமிற்கு வர, மூர்த்தி நீங்க எப்படி இங்கே இருக்கீங்க என கேட்கிறார். பின் கண்ணன் மூர்த்தியை உள்ளே சென்று பார்க்க சொல்ல அங்கே ராதிகா இருக்கிறார்.

மத்திய அரசு ஓய்வூதியம் பெறுவோர் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய வழிமுறை – முழு விவரங்கள் இதோ!

மூர்த்தி அதை பார்த்து என்ன இதெல்லாம் என கேட்க, அன்னைக்கு உங்க வீட்டில் அன்னைக்கு வந்து எவ்வளவு தூரம் சொல்லிவிட்டு சென்றேன். ஆனால் இப்போதும் இப்படி பண்ணிருக்கீங்க என கேட்க, கோபி அதை கேட்க நீ யார் என கேட்கிறார். நான் யாரா அது என் அக்கா, நீ என் தாய் மாமா மகன் என சொல்கிறார். எவ்வளவு திமிரு இருந்தால் இப்படி செய்வீங்க என கேட்க, எழில் மாமா வாங்க என கேட்க, ஆனால் மூர்த்தி வராமல் இருக்கிறார். மூர்த்தி இப்படி யாரையோ அழைத்து கொண்டு வந்திருக்கிறாய் என கேட்க, இது என் பொண்டாட்டி, உன் அக்கா தான் எனக்கு யாரோ என சொல்கிறார். மூர்த்தி நம்பாமல் இருக்க, கோபி ராதிகா கழுத்தில் உள்ள தாலியை எடுத்து காட்டுகிறார். மூர்த்தி அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் எபிசொட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!