தமிழக அரசு பள்ளிகளில் அதிகரிக்கும் காலிப்பணியிடங்கள் – விரைந்து நிரப்ப வலியுறுத்தல்!

0
தமிழக அரசு பள்ளிகளில் அதிகரிக்கும் காலிப்பணியிடங்கள் - விரைந்து நிரப்ப வலியுறுத்தல்!
தமிழக அரசு பள்ளிகளில் அதிகரிக்கும் காலிப்பணியிடங்கள் - விரைந்து நிரப்ப வலியுறுத்தல்!
தமிழக அரசு பள்ளிகளில் அதிகரிக்கும் காலிப்பணியிடங்கள் – விரைந்து நிரப்ப வலியுறுத்தல்!

தமிழக அரசுப் பள்ளிகளில் பல ஆயிரம் காலிப்பணியிடங்கள் இருக்கும் நிலையில் அது குறித்து அரசு எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

காலிப்பணியிடங்களை நிரப்புதல்:

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பல பணியிடங்கள் காலியாக இருக்கிறது. இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி ஒன்றை எழுப்பி இருக்கிறார். அதில் தமிழக அரசு பள்ளிகளில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், நடப்பாண்டில் 10,407ஆசிரியர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள் என ஏற்கனவே அறிவிப்பு வெளியானது.

Follow our Instagram for more Latest Updates

ஆனால் அது இன்னும் செயல்படுத்தப்படவில்லை. அரசு அறிவித்த பின் கூட தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் இது குறித்து நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட கால அட்டவணைப்படி, 6553 இடைநிலை ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதம் போட்டித்தேர்வு நடத்தப்பட்டிருக்க வேண்டும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – வெளியாகும் தேதி குறித்து முக்கிய தகவல்!

அதே போல 3,587 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய ஏப்ரல் மாதம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ஜூன் மாதத்தில் தேர்வுகள் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் 23 வட்டாரக் கல்வி அலுவலர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஒரே ஒரு அறிவிக்கை மட்டும் தான் வெளியாகியிருக்கிறது. ஆனால் இன்னும் தேர்வு நடத்தப்படவில்லை. அதனால் அரசு இது குறித்து அறிவிப்பை வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!