தமிழக கோவில்களில் உள்ள காலிப்பணியிடங்கள் – இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு!

0
தமிழக கோவில்களில் உள்ள காலிப்பணியிடங்கள் - இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு!
தமிழக கோவில்களில் உள்ள காலிப்பணியிடங்கள் - இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு!
தமிழக கோவில்களில் உள்ள காலிப்பணியிடங்கள் – இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு!

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அனைத்து காலிப்பணியிடங்களையும் விரைந்து நிரப்ப வேண்டும் என்று அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

காலிப்பணியிடங்கள்:

தமிழகத்தில் புதிய தளர்வுகள் படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (ஜூன் 28) முதல் கோவில்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். தற்போது இது தொடர்பாக அவர் அனைத்து கோவில் அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!

அதில் கூறியதாவது, முதுநிலை கோவிலின் நுழைவு நிலை பதிவுகளுக்கு தகுதியான நபர்கள், முதுநிலை அல்லாத கோவில்களில் இல்லாத நேர்க்கவுகளில் அத்தகைய பணியிடங்கள் பிற நியமன முறைப்படி அதாவது வெளியில் இருந்து நபர்களை கொண்டு நிரப்பப்படலாம். காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை, கல்வித் தகுதி, ஊதியம் மற்றும் இதர விவரங்கள் ஆகியவற்றை குறிப்பிட்டு தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரும் அறிவிப்பு வெளியிட வேண்டும்.

விண்ணப்பங்கள் கோரும் அறிவிப்புக்கு ஏற்ப சமய நிறுவனத்தின் வலைதளங்கள் மற்றும் அறிவிப்பு பலகை, கோவில் அமைந்துள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில், ஊராட்சி மன்றத்தில், நகராட்சியில், மாநகராட்சியில் மற்றும் அருகில் உள்ள கோவில்களில் விளம்பரப்படுத்தப்பட்ட வேண்டும். வரப்பெற்ற விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதி உள்ளதா என்பதை பரிசீலித்து தகுதி வாய்ந்த நபர்களுக்கு மட்டும் அனுப்ப வேண்டும்.

அதே நேரத்தில் தகுதியற்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பத்தினை நிராகரித்து அதற்கான காரணத்தை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். நேர்முக தேர்வினை தெரிவித்துள்ள விதியின்படி நேர்காணல் நடத்தப்பட வேண்டும். நேர்காணலில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு விண்ணப்பதாரரின் தரவரிசை கோவில் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட வேண்டும். தகுதியானவர்களுக்கு நியமன ஆணை வழங்கி நியமனம் தற்காலிகமானது என்றும் ஆணையரின் சீராய்வுக்கு உட்பட்டது எனவும் கண்டிப்பாக நியமன ஆணையில் குறிப்பிட வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

அதேபோல் பணியாளர் நியமனம் குறித்து உரிய விவரங்களுடன் 15 தினங்களுக்குள் ஆணையருக்கு அறிக்கை அனுப்பப்பட வேண்டும். காலிப்பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்புவதற்கு விதி 13,14 ல் குறிப்பிட்டுள்ள நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் இந்த விதிமுறைகளை பின்பற்றி பணியிடங்களை எவ்வித புகாருக்கும் இடமின்றி நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!