மத்திய பட்ஜெட் 2024 அப்டேட் – நிதியமைச்சர் முக்கிய தகவல்!
இந்தியாவில் 2024ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட இருக்கும் மத்திய பட்ஜெட் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அமைச்சர் அறிவிப்பு
இந்தியாவில் மக்களவை தேர்தல் விரைவில் வர இருக்கிறது. அதற்காக பல மாநில அரசுகளில் அரசியல் கட்சியினர் பிரச்சாரம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 2024ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1ம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கும் பட்ஜெட் வழக்கமான பட்ஜெட்டாக இருக்காது என தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு நிவாரண பொருள் வழங்க ஆட்கள் தேவை – உடனே அணுகவும்!!
அதாவது இந்த பட்ஜெட்டில் கண்கவர் அறிவிப்புகளை வெளியிட வாய்ப்பில்லை எனவும், இந்த பட்ஜெட் தற்போதைய அரசாங்கம் புதிய அரசாங்கம் பதவியேற்கும் வரை நாட்டை நடத்துவதற்கு தேவையான செலவினங்களுக்காக தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இது குறித்து தேசிய தலைநகரில் CII இன் உலகளாவிய பொருளாதார கொள்கை மன்றம் 2023ல் அவர் பேசி இருக்கிறார்.