வேலையில்லாதவர்களுக்கு பம்பர் சலுகை – ஆண்களுக்கான அரிய வாய்ப்பு!

0
வேலையில்லாதவர்களுக்கு பம்பர் சலுகை - ஆண்களுக்கான அரிய வாய்ப்பு!

கிராமப்புற மக்களின் நலுனுக்காக யூனியன் வங்கி வேலைவாய்ப்பிற்கான இலவச பயிற்சியை அளிக்க உள்ளது. இதற்கு வெள்ளை ரேஷன் கார்டு உள்ள ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.

ஆண்களுக்கான அரிய வாய்ப்பு:

யூனியன் வங்கி ஊரக சுயதொழில் பயிற்சி நிறுவனத்தில் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தல் குறித்து 30 நாட்கள் இலவசமாக ஆண்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று அதன் அமைப்பின் இயக்குநர் பி.சுரேஷ்பாபு தெரிவித்துள்ளார். இதற்கு 19 முதல் 45 வயதுக்குட்பட்ட திருப்பத்தூர் மற்றும் சித்தூர் மாவட்டங்களில் உள்ள ஆண்கள் விண்ணப்பிக்கலாம். அவர்கள் கட்டாயமாக வெள்ளை ரேஷன் கார்டு வைத்திருக்க வேண்டும்.

பள்ளி மாணவர்களுக்கு ஏப். 12ம் தேதி வரை சிறப்பு வகுப்புகள் – பள்ளி கல்வித்துறையின் அதிரடி உத்தரவு!

விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சியின் போது, இலவச உணவு வழங்கப்படும். பயிற்சிக்கு பின் சான்றிதழ் வழங்கப்படும். இந்த பயிற்சிக்கு ஆர்வமுள்ளவர்கள் ஆதார், ரேஷன் கார்டு மற்றும் 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களின் ஜெராக்ஸ் நகல்களுடன் நிறுவனத்திற்கு வந்து தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 79896 80587, 94949 51289, 63017 17672 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!