‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் புது கண்ணம்மா வினுஷா செய்த சாதனை – TRP ரேட்டிங்கில் மீண்டும் நம்பர் 1!

0
'பாரதி கண்ணம்மா' சீரியலில் புது கண்ணம்மா வினுஷா செய்த சாதனை - TRP ரேட்டிங்கில் மீண்டும் நம்பர் 1!
'பாரதி கண்ணம்மா' சீரியலில் புது கண்ணம்மா வினுஷா செய்த சாதனை - TRP ரேட்டிங்கில் மீண்டும் நம்பர் 1!
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் புது கண்ணம்மா வினுஷா செய்த சாதனை – TRP ரேட்டிங்கில் மீண்டும் நம்பர் 1!

விஜய் டிவி என்றாலே அதில் புதுமைக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும். அந்த வகையில் இந்த வார TRP பட்டியலில் விஜய் டிவி சீரியல்களில் “பாரதி கண்ணம்மா” சீரியல் முதலிடத்தை பிடித்துள்ளது.

பாரதி கண்ணம்மா:

விஜய் டிவி சீரியல்கள் அனைத்திற்கும் மக்களிடமே நல்ல வரவேற்பு உண்டு. காலை முதல் இரவு வரை பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் மக்கள் மனம் கவர்ந்த சீரியல் என TRP பட்டியலில் ஒரு சில சீரியல்கள் மட்டுமே உள்ளன. இந்த ஆண்டிற்கான 47வது வார TRP பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் வழக்கம் போல பாரதி கண்ணம்மா சீரியல் 11.9 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது. கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்த ரோஷினி சீரியலில் இருந்து விலகிய நிலையில் புதிதாக வினுஷா நடிக்க தொடங்கி இருக்கிறார்.

பழைய வீட்டை காலி செய்து விட்டு டி.நகரில் குடியேறிய ‘விஜய் டிவி’ மைனா – ட்ரெண்டான யூடுப் வீடியோ!

மேலும் கதையில் சுவாரசியம் அதிகரித்து இருப்பதால் சீரியல் ரசிகர்களுக்கு விறுவிறுப்பு கூடி உள்ளது. அடுத்து இரண்டாவது இடத்தில் பாக்கியலட்சுமி சீரியல் 11.3 புள்ளிகளுடன் நல்ல ரேட்டிங்கில் இருக்கிறது. மூன்றாவது இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல், 10.9 புள்ளிகளுடன் இருக்கிறது. நான்காவது இடத்தில் ராஜா ராணி 2 சீரியல் 9.9 புள்ளிகளுடன் இருக்கிறது. ஐந்தாவது இடத்தில் தமிழும் சரஸ்வதியும் சீரியல் 8.7 புள்ளிகளுடன் இருக்கிறது.

சத்தமே இல்லாமல் சன் டிவி ‘ரோஜா’ சீரியல் நிகழ்த்திய சாதனை – ரசிகர்கள் வாழ்த்து!

ஆறாவது இடத்தில் மௌனராகம் சீரியல் 6.2 புள்ளிகளுடன் இருக்கிறது. ஏழாவது இடத்தில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 5.5 புள்ளிகளுடன் இருக்கிறது. எட்டாவது இடத்தில் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் 4.6 புள்ளிகளுடன் இருக்கிறது. ஒன்பதாவது இடத்தில் தென்றல் வந்து என்னை தொடும், நம்ம வீட்டு பொண்ணு மெகா சங்கமம் சீரியல் 3.9 புள்ளிகளுடன் இருக்கிறது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட முத்தழகு சீரியல் 2.9 புள்ளிகளை பெற்றுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!