சத்தமே இல்லாமல் சன் டிவி ‘ரோஜா’ சீரியல் நிகழ்த்திய சாதனை – ரசிகர்கள் வாழ்த்து!

0
சத்தமே இல்லாமல் சன் டிவி 'ரோஜா' சீரியல் நிகழ்த்திய சாதனை - ரசிகர்கள் வாழ்த்து!
சத்தமே இல்லாமல் சன் டிவி 'ரோஜா' சீரியல் நிகழ்த்திய சாதனை - ரசிகர்கள் வாழ்த்து!
சத்தமே இல்லாமல் சன் டிவி ‘ரோஜா’ சீரியல் நிகழ்த்திய சாதனை – ரசிகர்கள் வாழ்த்து!

தமிழ் சின்னத்திரை தொடர்களில் அதிகபட்ச பார்வையாளர்களின் கவனம் ஈர்த்து எப்போதும் முன்னணி இடத்தை வகித்திருக்கும் சன் டிவியின் ‘ரோஜா’ சீரியல் தற்போது 1000 எபிசோடுகளை கடந்து புதிய சாதனை நிகழ்த்தி இருக்கிறது.

ரோஜா சீரியல்

தற்போதெல்லாம் சினிமா திரைப்படங்களைப் போலவே சில சீரியல்களும் ஆக்ஷன், சண்டை, காதல் காட்சிகள் என பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த கால கட்டத்தில் உள்ள சின்னத்திரை ரசிகர்களும் இதை தான் எதிர்பார்க்கின்றனர். அந்த வகையில் அதிகபட்ச ஸ்டண்ட் காட்சிகள், ரொமான்ஸ் காட்சிகள் என அனைத்தையும் கொடுத்து எக்கச்சக்கமான ரசிகர்களை சம்பாதித்து வைத்திருக்கும் ஒரு முக்கியமான சின்னத்திரை தொடர் ‘ரோஜா’ ஆகும்.

பழைய வீட்டை காலி செய்து விட்டு டி.நகரில் குடியேறிய ‘விஜய் டிவி’ மைனா – ட்ரெண்டான யூடுப் வீடியோ!

ஒவ்வொரு நாளும், கலகலப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமே இல்லாமல் ஒளிபரப்பாகி வரும் இந்த ‘ரோஜா’ சீரியலில் அர்ஜுன் கதாப்பாத்திரத்தில் நடிகர் சிப்பு சூர்யன் மற்றும் ரோஜா கதாப்பாத்திரத்தில் நடிகை ப்ரியங்கா நல்காரியும் நடித்து வருகின்றனர். இந்த சீரியலில் அர்ஜுன் மற்றும் ரோஜாவின் ரொமான்டிக் காட்சிகளுக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே இருந்து வருகிறது. இப்படி, மக்களின் மனம் கவர்ந்துள்ள ‘ரோஜா’ சீரியல் ஒவ்வொரு வாரமும் TRP ரேட்டிங்கில் முதன்மை இடத்தை பிடித்து வருகிறது.

திருமணத்திற்கு பிறகு ஒன்றிணைந்த ‘செம்பருத்தி’ ஷபானா, ரேஷ்மா – புதுமண ஜோடிகளுக்கு குவியும் வாழ்த்து!

இடையில் ஒரு சில சறுக்கல்களை சந்தித்து வந்தாலும், பார்வையாளர்களின் கவனம் ஈர்த்து TRP ரேட்டிங்கை தொடர்ச்சியாக தக்கவைத்து வருகிறது. இந்நிலையில் ‘ரோஜா’ சீரியல் சத்தமே இல்லாமல் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறது. அதாவது சுமார் 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் சமீபத்தில் 1000 எபிசோடுகளை கடந்து மாபெரும் வெற்றியடைந்திருக்கிறது. தற்போது ‘ரோஜா’ சீரியல் நிகழ்த்தி இருக்கும் இந்த சாதனைக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here