நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு – தேர்தலால் நிறுத்தி வைப்பு!

0
நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு - தேர்தலால் நிறுத்தி வைப்பு!

இந்தியா முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்துவதும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் தேர்தல் என்று சொல்லப்படுகிறது.

சுங்க கட்டண உயர்வு:

நாடு முழுவதும் ஏப்ரல் ஒன்று ஒன்று முதல் அமலுக்கு வர இருந்த சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சுங்க கட்டணத்தை உயர்த்த தமிழக முதலமைச்சர் பல்வேறு தரப்பினர் லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தேர்தல் பிரச்சாரத்தின் போதும் சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை உயர்த்துவதற்கு கடும் கண்டனம் பல்வேறு தரப்பிலிருந்து எழுந்ததை தொடர்ந்து தற்போது மக்களவைத் தேர்தல் காரணமாக ஒன்றிய அரசு சுங்க கட்டணத்தை உயர்த்தவில்லை.

தமிழக ஆசிரியர்களுக்கு இலவச டேப்லெட் – கல்வித் துறை அறிவிப்பு!

அதே கட்டணம் தற்போது அமலில் உள்ளது. மேலும் சுங்க கட்டணத்தை உயர்த்தி பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறுவதாக சுங்கச்சாவடி நிறுவனங்களுக்கு நெடுஞ்சாலை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியதும், மறு உத்தரவு வரும் வரை ஏற்கனவே உள்ள கட்டணமே வசூலிக்கப்படும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தலுக்குப் பிறகு சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படலாம் என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு ஜூன் இறுதிக்குள் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!