#Breaking: அதிரடி சரிவை கண்டுள்ள ஆபரணத் தங்கத்தின் விலை – மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!

0
#Breaking: அதிரடி சரிவை கண்டுள்ள ஆபரணத் தங்கத்தின் விலை - மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!
#Breaking: அதிரடி சரிவை கண்டுள்ள ஆபரணத் தங்கத்தின் விலை - மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!
#Breaking: அதிரடி சரிவை கண்டுள்ள ஆபரணத் தங்கத்தின் விலை – மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தாறுமாறாக அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில், இன்று நகைப்பிரியர்களை மகிழ்விக்கும் விதமாக அதிரடி சரிவை கண்டுள்ளது. இன்றைய தங்கத்தின் நிலவரம் குறித்து விரிவாக பார்ப்போம்.

தங்கம் விலை

தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து, புதிய புதிய உச்சத்தை தொட்டு ரூ.45 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. இருப்பினும் நகைப்பிரியர்கள் மத்தியில் தங்கத்தின் மீதான ஆர்வம் சிறிதும் குறையவில்லை. இந்த நிலையில், இன்று நகைப்பிரியர்களை மகிழ்விக்கும் விதமாக தங்கத்தின் விலையானது என்றும் இல்லாத அளவுக்கு அதிரடியாக சவரனுக்கு ரூ.800 என குறைந்துள்ளது.

Voter ID – Aadhaar இணைக்க மேலும் ஓராண்டு கால அவகாசம் நீட்டிப்பு – மத்திய அமைச்சகம் அறிவிப்பு!

அதன்படி, நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.44, 560 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ.800 குறைந்து சவரன் ரூ.43,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5570க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று கிராமுக்கு ரூ.100 குறைந்துள்ளதை தொடர்ந்து, ரூ.5470க்கு விற்பனையாகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இதே போன்று வெள்ளியின் விலையும் கிலோவுக்கு ரூ.700 என அதிரடி சரிவை கண்டுள்ளது. அதன்படி இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.74க்கும், அத்துடன் கிலோவுக்கு ரூ.74,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!