அரசு கல்லூரிகளில் பேராசிரியர் நியமனம் ?? – தவிப்பில் தேர்வர்கள்

0
அரசு கல்லூரிகளில் பேராசிரியர் நியமனம் - தவிப்பில் தேர்வர்கள்
அரசு கல்லூரிகளில் பேராசிரியர் நியமனம் - தவிப்பில் தேர்வர்கள்

அரசு கல்லூரிகளில் பேராசிரியர் நியமனம் ?? – தவிப்பில் தேர்வர்கள்

அரசு கல்லூரிகளில் பேராசிரியர் நியமனம் இன்னும் நடைபெறாமலேயே உள்ள காரணத்தினால் பேராசிரியர் நியமனம் நடைபெறுவது எப்போது என தேர்வர்கள் அனைவரும் தவிப்பில் உள்ளனர். இது குறித்த விரிவான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

4500 காலிப்பணியிடங்கள் :

தமிழக உயர்கல்வித் துறையின் கீழ் மொத்தம் 116 கலைக்கல்லூரிகள் உள்ளன. அவற்றில் மட்டும் பல்வேறு பாடப்பிரிவுகள் உள்ளன. இந்த அனைத்து பாடப்பிரிவுகளுக்குமான ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் பணியிடங்கள் முழுவதுமாக நிரப்படவில்லை.

இந்த 116 கல்லூரிகளில் பேராசிரியர்கள் பணிகளுக்கு என 4500 காலியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமலேயே உள்ளது. இந்த பணிகளுக்கு என சென்ற 2019ம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் இந்த பணிகளுக்கு என அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியிட்டது. ஆனால் அதில் 2331 பணியிடங்களுக்கு மட்டுமே வெளியாகி இருந்தது.

ஆன்லைன் சான்றிதழ் பதிவேற்றம் !

இதற்கு ஆன்லைனில் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்து அதன் பின்னர் அவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் என்றே அந்த அறிவிப்பில் கூறப்பட்டு இருந்தது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த அறிவிப்பின்படியே ஆன்லைனில் பலரும் தங்களின் சான்றிதழ்களை பதிவேற்றினர். பல்வேறு சிக்கல்கள் காரணமாக பதிவேற்றத்திற்கான அவகாசம் கடந்த ஜனவரி மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டது.

இருப்பினுமதற்கு அடுத்த கட்ட நேர்முகத் தேர்வு அறிவிப்பு வெளியாகாமலேயே இருந்தது. அதன் பின்னர் மார்ச் மாதம் முதல் கொரோனா ஊரடங்கு ஏற்பட்டு விட்டது. பதிவேற்றம் செய்து தற்போது 9 மாதங்கள் ஆகிய நிலையிலும் இன்னும் நேர்காணலுக்கான அறிவிப்பு வரவில்லை.

விண்ணப்பித்தவர்கள் வேதனை :

ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் கல்லூரி கல்வி இயக்குனரகம் ஆகியவை மெத்தன போக்கில் செயல்படுவதால் விண்ணப்பித்தவர்கள் வேதனையில் இருப்பதாக தேர்வர்கள் சார்பில் குற்றம் சாட்டப்படுகிறது. மேலும் இந்த அறிவிப்பு ஆனது கடந்த 2014 ஆம் ஆண்டிற்கு பிறகு 5 ஆண்டுகள் கழித்து வெளியானது என்பதனால் இம்முறை அநேகமானோர் பதிவு செய்து உள்ளனர், அவர்கள் அனைவர்க்கும் இன்னும் எந்த தகவலும் கிடைக்கவில்லை என்பதனால் மிகவும் தவிப்பில் உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!