மதங்கள் 

0
மதங்கள் 
 • கி.மு.6-ஆம் நூற்றாண்டில் பாரசீகத்தைச் சேர்ந்த ஜெராஸ்டரும், சீனாவில் கன்பூஷியஸீம் புதிய கருத்துக்களை போதித்தனர்.
 • புத்த, சமண, மதங்கள் தோன்ற காரணம். சமயச் சடங்குகளைக் களைய சாதி
  ஏற்றத் தாழ்வை ஒழிக்க மிருகவதையை தடுக்க

சமண சமயம்: ( கி.மு.540 -கி.மு.467 ) 

 • கி.மு.6–ஆம் நூற்றாண்டில் தோன்றியது.
 • இதன் வேறுபெயர் – ஆருகதம், ஜைனம், நிகண்டவாதம், ஆசீவகம்.
 • இதில் கூறப்பெறும் பொருள் ஏழு. அவை 1.சீவன் 2.அசீவன் 3.ஆச்சிரவம் 4.சமுவரம் 5.பந்தம் 6.வீடு 7.நிர்ச்சவரம்.
 • சீவன் ஆசாபாசங்களை கடந்து ஆனந்த ஞானம் முதலிய 8 குணங்களைப் பெற்று
  ஆகாயத்தில் மேல்நோக்கிச் சென்று மேலிடத்தில் இருப்பதே முக்தி ஆகும்.
 • சிலரின் கருத்துக்கள் — ரிஷபதேவரால் (முதல் தீத்தங்கரர்) சமணசமயம்
  தோற்றுவிக்கப்பட்டது.
 • சமண சமயத்தை தொற்றுவித்தவர் — வர்த்தமான மகாவீரர் (24-வது தீர்த்தங்கரர்)
 • கி.மு. 540 – ல் பீகாரில் வைசாலிக்கு அருகே குந்தக் கிராமத்தில் மகாவீரர் பிறந்தார்.
 • தந்தை — சித்தார்த்தர். தாயார் — திரிசலா(லிச்சாவி மரபைச் சேர்ந்த இளவரசி).
 • மனைவி — யசோதா. முதல் தீத்தங்கரர் மகள் – பிரியதர்சனா
 • 30 வயதில் துறவு பூண்டார்.
 • 2 வயதில் கைவல்ய நிலையாகிய ஆன்மீக அறிவு பெற்றார்.
 • ஜீனர் (தன்னை வென்றவர்) என்றும் அழைக்கப்பட்டார்.
 • இராஜகிரிக்கு அருகேயுள்ள பவபுரியில் கி.மு 467 – ல் தனது 72-வது வயதில் இறந்தார்.
 • கடவுள் நம்பிக்கை இல்லை. மனிதனின் ஆத்ம ஒளியே கடவுள் என போதித்தார்.
 • மறு பிறவி மீது நம்பிக்கை கொண்டனர்.
 • இவரது போதனைகள் திரிரத்தினங்கள்(நன்னம்பிக்கை, நல்லறிவு, நன்னடத்தை)
  எனப்படும்.
 • அஹிம்சை நெறிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.
 • சீடர்களுக்கு ஐந்து கொள்கைகளை (விரதங்கள்) போதித்தார்.
  1. அஹிம்சை ——- உயிர்களுக்கு தீங்கு செய்யாமை.
  2. சத்தியம் ——– உண்மை பேசுதல்.
  3. அஸ்தேயம்——– திருடாமை.
  4. தியாகம் ——– செல்வம் துறத்தல்.
  5. பிரம்மசரியம் —- தூய வாழ்க்கை.
 • கர்மா என்ற தத்துவத்தை நம்பினார்.
 • சமண சமயம் கூறும் பாவங்களின் எண்ணிக்கை – 100
 • சமண சமயத்தின் உயர்ந்த நோக்கம்— மேலான அறிவினை பெறுதல்
 • சமண சமயத்தை பின்பற்றுபவர்கள் — திகம்பரர் (ஆடை துறந்தவர், ஆகாயத்தை ஆடையாக அணிந்தவர், ஸ்வேதாம்பரர் (வெள்ளை ஆடை அணிந்தவர்).)
 • பிராக்ருத மொழியில் கொள்கைகளை பரப்பினார்.
 • சமண சமயத்தை ஆதரித்த மன்னர்கள் — பிம்பிசாரர், அஜாதசத்ரு, கூன்பாண்டியன்.
 • முதலாம் மகேந்திரவர்மன், கலிங்க மன்னன் காரவேலன், சந்திர குப்த மௌரியர் (தனது இறுதி காலத்தில் ஆதரித்தார்),களப்பிரர்கள்.
 • சமண சமய நூல்கள் — சீவகசிந்தாமணி (திருத்தக்கதேவர்), நன்னூல்(பவணந்தி
  முனிவர்).
 • திருவள்ளுவர் சமண சமயத்தை சார்ந்தவர்.
 • குஜராத்தின் வரலாறு, யோகசூத்திரம் ஆகிய நூல்களை எழுதியவர்- சமண சமயத்தை தழுவிய ஹேமச்சந்திரர்.
 • சமண சமய கட்டிடக்கலைக்கு எடுத்துகாட்டு — இராஜஸ்தானில் உள்ள அபுமலையில் காணப்படும் தில்வாரா கோயில், கஜூராஹோ கோயில், சித்தூர், ரனகபூர் கோயில்.
 • சமணர்களின் சிற்ப வேலைப்பாடுகள் காணப்படுமிடங்கள் — உதயகிரி, கதிகும்பா,
  எல்லோரா,கிர்னார்.
 • மைசூருக்கு அருகேயுள்ள சரவணபெலகொலா எனுமிடத்தில் உள்ள கோமதீஸ்வரர் சிலை சமணர்களின் நினைவு சின்னமாகும்.
 • கி.மு 300-ம் ஆண்டில் பாடலிபுத்திரத்தில் முதல் சமண அவை நடைபெற்றது.(மகாவீரரின் கோட்பாடுகள் 12 அங்கங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.)
 • கி.பி 512 இல் வல்லபியில் 2-ஆம் மாநாடு கூடியது.
 • சமண சமயம் வீழ்ச்சியுற காரணம் – அது தெரிவித்த கொல்லாமை எனும் கொள்கை.
 • அநேகாந்தவாத கோட்பாடு பற்றி விளக்குவது – மகாவீரரின் சமண சமயக் கொள்கை.
 • அநேகாந்தவாதம் – பல்நிலைக்கோட்பாடு: ஏகாந்தவாம் – ஒருநிலைக்கோட்பாடு
 • யாக்ஞவல்கிய முனிவரால் எழுதப்பட்ட பண்டைய சமயச் சட்டநூலாகவும், சொத்துரிமை குற்றவியல் பற்றியும் எடுத்துரைக்கும் நூல் – யாக்ஞவல்கிய சுமிருதி.
 • சமண முனிவர்களின் நடத்தை விதிகள் கொண்ட நூல் – 6 சேய சூட்டங்கள்.
 • எளிய வாழ்க்கையைப் பற்றிய மூலத்தத்துவங்கள் அடங்கிய நூல் – 4 மூல சூட்டங்கள்.
 • சமண மதத்தின் வேறுபெயர்கள் – அருகமதம், நிகண்டமதம், அநேகாந்தவாதமதம், சியாத்வாத மதம்
 • 23-வது தீர்த்தங்கரான பார்ச்சுவ நாதரைப் பின்பற்றியவர்கள் – ஸ்வேதாம்பரர்கள்.
 • 24-வது தீர்த்தங்கரான வர்த்தமானரைப் பின்பற்றியவர்கள்- திகம்பரர்கள்.
 • வர்த்தமான மகாவீரர் உண்மையறிவை பெற்ற இடம் – ரிஜுபாலிகா
 • கோசலமால்கி புத்திரா என்பவரை 24-வது தீர்த்தங்கராக ஏற்றுக் கொண்ட சமணர்கள்
  – அஜுவிக்ரர்கள் எனப்பட்டனர்.
 • அஜுவிக்ரர்கள் பின்பற்றாத சமண சமய கருத்துகள் – மறுபிறப்பு, கருமவினை.
 • உருவ வழிபாடு செய்ய மறுத்த சமணர்கள் -ஸ்தானகவாசி எனப்பட்டனர்.
 • வாய் வழியாக பின்பற்றப்பட்ட சமணசமய அறிவுரைகளை தொகுத்தவர் – வாலிநாட்டு துருவசேனர்.
 • துருவசேனரும், பத்திரபாகுவும் தொகுத்த நெறிகள் – பதினான்கு பர்வாங்கங்கள்
 • பாடலிபுத்திரத்தில் முதல் சமண மாநாடு கூட்டியவர் – லபத்ரா
 • முதல் சமண மாநாட்டில் தொகுக்கப்பட்டவை – பன்னிரு அங்கங்கள்
 • கி.பி 5 ம்  நூற்றாண்டில் வல்லபியில் கூடிய 2-வது சமண அவையில் தொகுக்கப்பட்டவை – 12 உப அங்கங்கள்.
 • கி.பி 12 ம்  நூற்றாண்டில் சமண வேதாகமங்களை திருத்தியவர் – ஹேமச்சந்திரர்.
 • சமண சமய நூல்கள் – சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், வளையாபதி, நீலகேசி,
  உதயணன் காதை, நாககுமாரகாவியம், மேருமந்திர புராணம், நரிவிருத்தம், நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி, திணைமாலைநூற்றம்பது, சத்தியசிந்தாமணி, யாப்பருங்கலக்காரிகை, யாப்பருங்காலவிருத்தி, நேமநாதம், நன்னூல், அகப்பொருள் விளக்கம், தமிழ்நிகண்டு, சூடாமணிநிகண்டு, நெல்லிலக்க வாய்ப்பாடு, சிறுகுழி வாய்ப்பாடு, கணிதமாலை, ஜிதேந்திரமாலை.
 • ரிஷப தேவர் – காளை : பர்சவநாதர் – நாகம் : மகாவீரர் – சிங்கம்.

புத்த சமயம்:கி.மு 567 – கி.மு 487

 • தோற்றுவித்தவர்: — புத்தர்.
 • இயற்பெயர் — சித்தார்த்தர்.
 • நேபாளத்திலுள்ள கபிலவஸ்து என்ற இடத்திற்கு அருகே லும்பினி வனத்தில் கி.மு.567 பிறந்தார்.
 • தந்தை: — சுத்தோதனர்(சாக்கிய குல தலைவர் ).
 • தாயார் — மாயாதேவி (கோலியா குல இளவரசி )
 • சிற்றன்னை — பிராஜாபதி கௌதமி (இவரால் வளர்க்கப்பட்டதால் கௌதமபுத்தர் என
  அழைக்கப்பட்டார்.
 • மனைவி – யசோதரை மகன் -ராகுல்
 • 29-ல் துறவறம்.
 • புத்தரின் முதல் குரு — அரதகலமா. 2–வது குரு — ருத்ரகா.
 • புத்தமதம் நான்கு வகைப்படும். அவை 1)யோகாசாரம் 2)சௌந்திராந்திகம்
  3)வைபாடிகம் 4)மாத்மிகம்
 • கொள்கை: எல்லா பொருளும் சூன்யம், கடவுள் இல்லை. ஞானமே ஆன்மா, வினையும் மறுபிறப்பும் உண்டு. வினையூட்டி வேண்டாம் அது தானே சென்று பற்றும்.
 • புத்தம் கூறும் நற்குணங்கள் பத்து. தீயகுணங்கள் பத்து.
 • துன்ப விடுதலை – நிர்வாணம் (அ) சமாதி நிலை என்பர்.
 • கயை நகரில் போதி மரத்தின்(அரசமரம்) அடியில் ஞானோதயம்(மெய்ஞான அறிவு )
  பெற்றார். அது முதல் புத்தர் என்றும், சாக்கியமுனி என்றும் அழைக்கப்பட்டார்.
 • வாரணாசிக்கருகே சாரநாத் மான் பூங்காவில் முதன்முதலில் சமயக்கருத்துக்களை போதித்தார்.
 • 80–வது வயதில் மல்லர்களின் தலைநகரான குசி நகரில் இறந்தார்.
 • போதனைகள்: அஹிம்சையையும், அன்புகாட்டுதலையும் அடிப்படையாக கொண்டது.
 • இவரது போதனைகளில் நான்கு பெரும் உண்மைகளும், எண் வகை (அஷ்டாங்கி) மார்க்கங்களும் முக்கியமானதாகும்.
 • நான்கு பெரும் உண்மைகள் துக்கம், சமுதாயம், நிரோதம் (ஆசையை ஒழிப்பதன் மூலம் துன்பத்திலிருந்து விடுதலை), மார்க்கம் .
 • சீடர்களுக்கு ஐந்தொழுக நெறிகளை போதித்தார்.
 • கொல்லாமை கொள்கையை வலியுறுத்தினார்.கர்மா கொள்கை, மறுபிறப்புக் கொள்கையில் நம்பிக்கை வைத்திருத்தார். கடவுள் நம்பிக்கை இல்லை.
 • போதனைகளின் தொகுப்பு — திரிபீடகங்கள்(மூன்று கூடைகள் – சுத்த, வினய,  அபிதம்ம பீடகங்கள்).
 • புத்த சமயத்தின் அடிப்படைக்கொள்கை — நிர்வாண நிலையை எய்துவது அல்லாது
  அறியாமையை அகற்றுவது.
 • புத்த மதத்தை ஆதரித்த மன்னர்கள் அசோகர், கனிஷ்கர், பிம்பிசாரர், அஜாதசத்ரு.
 • சாக்கிய முனி, ஆசியாவின் ஒளி என புத்தர் அழைக்கப்பட்டார்.
 • அசோகர் தன் மகன் மகேந்திரனையும், மகள் சங்கமித்திரையையும், புத்த மதத்தைப்
  பரப்ப இலங்கைக்கு அனுப்பினார்.
 • கனிஷ்கர் காலத்தில் பர்மா, ஜப்பான், திபெத், மத்தியஆசியா, சீனா ஆகிய நாடுகளில்
  புத்த மதம் பரவியது.
 • கனிஷ்கர் காலத்தில் புத்தமதம் மஹாயானம், ஹீனயானம் என இரு பிரிவுகளாக பிரிந்தது.
 • புத்த ஸ்தூபிகள் காணப்படும் இடம் — சாஞ்சி, வல்லபி, நலந்தா.
 • புத்த ஜாதக கதைகள் என்பது – புத்தரின் முற்பிறவி பற்றிக் கூறுவது.
 • காந்தாரச்சிற்பம், அஜந்தா, எல்லோரா ஆகியவற்றிலுள்ள சிற்பங்கள் புத்த சமயத்தின்
  நன்கொடையாகும்.
 • புத்த சமயத்தின் பிரார்த்தனைக்கூடங்கள் சைத்தியங்கள் என்றும், மடாலயங்கள் விகாரங்கள் என்றும் அழைக்கப்படும்.

புத்த சமய மாநாடுகள்

மாநாடு ஆண்டு மாநாடு கூட்டப்பட்ட இடம்  மன்னர் தலைவர்
1 -வது கி.மு. 483 இராஜகிருகமருகே உள்ள சப்தபாணக் குகை அஜாதசத்ரு மகா கசபா
2-வது கி.மு. 383 வைசாலி காகவர்மன் சபகமி
3-வது கி.மு.251 பாடலிபுத்திரம் அசோகர் மொகாலிபுத்ததிசா
4-வது கி.பி.100 காஷ்மீர் குயதல்கண்ட் கனிஷ்கர் அசுவகோஷர்
 • முதல் மாநாட்டில் புத்தரின் போதனைகளாகிய வினய பீடகம், சுத்த பீடகம் ஆகியவற்றை தொகுக்கும் பணியில் உபாலியும் , ஆனயதரும் முக்கியப் பங்கு வகித்தனர்.
 • 2-வது மாநாட்டில் கருத்துவேறுபாட்டின் விளைவாக பழமைவிரும்பிகள் ஸ்தாபரவாதிகள் (அ) தோர்கள் என்றும், மாற்றங்களை விரும்பியவர்கள் – மகாசாங்கியர்கள் என்றும் பிரியதனர்.
 • 3-வது மாநாட்டில் அபிதம்ம பீடகம் தொகுக்கப்பட்டது.
 • மூன்று பீடகங்களின் தொகுப்பு – மூன்று இரத்தினங்கள் (அ) மூன்று கூடைகள் எனப்படும்.
 • மூன்று பீடகங்களுக்கான உரைகளின் பெயர் – விபாஷங்கள்
 • புத்தமதம் வீழ்ச்சியுற காரணம் — குப்தர் கால இந்து மறுமலர்ச்சி, அரசரின் ஆதரவின்மை.
 • உருவ வழிபாடு அறிமுகமான புத்த சமயப் பிரிவு – மகாயானம்
 • `இயது சமயத்தின் புரட்சிக்கார பெண்கள்` என அழைக்கப்பட்ட மதங்கள் – சமணம், புத்தம்.

உலகாயதம்

 • இம்மதத்தை தோற்றுவித்தவர் – பிரகஸ்பதி
 • இதன் வேறுபெயர்கள் – சாருவாகம், காட்சிவாதம், நாத்திகவாதம் என்பர்.
 • ஐம்பூதங்களில் நிலம், நீர், காற்று, தீ ஆகிய நான்கு மட்டுமே உண்டு என்பர்.
 • நல்ல பெண்ணை மணந்து இன்பம் நுகர்வதே முக்தி எனக் கூறும் மதத்தவர் -உலகாயத மதத்தவர்.
 • இம்மை வாழ்க்கை ஒன்றினையே குறிக்கோளாக கொண்டு வாழ்க்கை நடத்துவோர் –
  உலகாயத மதத்தவர்.

சாங்கியம்

 • அறவொழுக்கத்தோடு ஆன்ம உணர்வையும் பொருளாகக் கொண்டு உணர்த்தும்
  சமயங்கள் – சாங்கியம், யோகம், வேதாந்தம்
 • தோற்றுவித்தவர் — கபிலர். தத்துவம் 24.
 • 25-வது தத்துவம் — புருடன்.
 • புருடன் பெத்தநிலையிலும், முக்திநிலையிலும் ஒரே தன்மையாய் தாமரையிலை
  தண்ணீர் போல பற்றற்று இருப்பான்.
 • மூலப்பகுதியின் பரிமாணம் புத்தியாகும். அதுவே காரணமுமாகும். மூலப்பகுதி, புருடனை பகுத்துரைப்பதால் அவிச்சை நீங்குவதே முக்தி.

மீமாம்சம்

 • தோற்றுவித்தவர் — ஜைமினி. இவர் வேதவியாசரின் சீடராவார்.
 •  ‘உலகம் நிலைபெற்றது. தோன்றியழியாது’ என்பர்.
 • மீமாம்சம் இருவகைப்படும். 1)பட்டாச்சரியன் மதம் 2)பிரபாகரன் மதம்
 • பட்டாசாரியன் மதம் — தர்மம் பயன்கொடுக்கும். வேத வேள்விகள் தத்துவ ஞானம் தரும். சொர்க்க முக்தியே முக்தி. இதில் ஒரு ஆனந்தமுண்டு.
 • பிரபாகரன் மதம் — ஞானம் கெட்டபோது கல் போல் கிடப்பதே முக்தி.

Pdf Download

TNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள் Download

TNPSC Current Affairs in Tamil 2018

Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Facebook  Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!