சைவ சாத்திரங்கள்

1

சைவ சாத்திரங்கள்

  • சுருக்கமாக சொல்லப்பட்ட நன்னெறி வழிகாட்டி – சாத்திரங்கள் ஆகும்.
  • சாத்திரங்கள் மொத்தம் 14 ஆகும்.
சாத்திரங்கள்  எழுதியவர்  சாத்திரங்கள்  எழுதியவர் 
திருவுந்தியார் திருவியலூர் உய்யவந்த
தேவநாயானார்
சிவப்பிரகாசம்  உமாபதி சிவனார்
திருக்களிற்றுப்படியார் திருக்கடவூர் உய்யவந்த
தேவநாயனார்
திருவருட்பயன்
சிவஞானபோதம் மெய்கண்ட தேவநாயனார் வினாவெண்பா
இருபா இருபது  அருணந்தி சிவாச்சாரியார் போற்றப:றொடை
சிவஞானசித்தியார் கொடிக்கவி
உண்மைவிளக்கம்  மனவாசகம் கடந்தார்  நெஞ்சுவிடுதூது
சங்கற்பநிராகரணம்  உமாபதி சிவனார் உண்மைநெறி
விளக்கம்
  • மேற்கண்ட 14 நூல்களும் –  மெய்கண்ட சாத்திரங்கள் (மெய்கண்டநூல்கள்) எனப்படும்.
  • திருவுந்தியார் மற்றும் திருக்களிற்றுப்படியார் இயற்றப்பட்ட காலம் – 12ம் நூற்றாண்டு. ஏனைய நூல்கள் தோன்றியது – 13-14ம் நூற்றாண்டு.

சிவஞானபோதம்

  • சாத்திரங்களில் தலைசிறந்த நூல் – சிவஞானபோதம்.
  • சிவஞானபோதத்தின் காப்புச் செய்யுளில் வணங்கப்படும் கடவுள் – சிவபிரான், விநாயகப் பெருமான்.
  • சிவஞானபோதம் என்பதன் பொருள் – கடவுளை அறிந்து தெளிதலுக்குரிய நூல்.
  • சிவஞானபோதத்திலுள்ள சூத்திரங்களின் எண்ணிக்கை — 12
சூத்திரம் சூத்திரம் கூறும் கருத்துக்கள்
1 பதியின் உண்மையைக் குறிக்கிறது (பதி -இறைவன், முதல்வன்)
2 பதியின் பொது இலக்கணம்
3 பசுவின் உண்மை (பசு – உயிர், ஆன்மா)
4  பாசம் மற்றும் பசுவின் பொது இலக்கணம்
5 பாசத்தின் சிறப்பிலக்கணம்(இறைவன் உயிர்களை தொழிற்படுத்துதல்)
6 பதியின் சிறப்பிலக்கணம்
7 பசுவின் சிறப்பிலக்கணம்
8 ஞானத்தை உணரும் முறை
9 ஆன்ம சுத்தி
10  பாச நீக்கம்
11 சிவப்பேற்றினை விளக்குகிறது
12 அணைந்தோர் தன்மை எனப்படும் ஜீவன்முத்தர் இயல்பைக் குறிக்கும்
  • சிவஞானபோதத்தின் உரைநூல்கள் — பாண்டிபெருமாள் விருத்தி, சிவஞானபோதச் சிற்றுரை, சிவஞானபோதமாபாடியம் (அ) திராவிட மாபாடியம் ஆகியன.
  • திராவிடமாபாடியம் உரைநூலை எழுதியவர் – அப்பாடியம் விக்கிரமசிங்கபுரத்தில் உதித்தவரும், திருவாவடுதுறை ஆதீனத்தை சேர்ந்தவருமான மாதவ சிவஞான சுவாமிகள்.
  • சிவஞானபோதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்கள் – ஹாய்சிங்டன், பையட்பாதிரியார், கார்டன்மாத்யூஸ், நல்லசாமிப்பிள்ளை, டேவிட்நவமணிநாடார், சிவபாத சுந்தரம் முதலியானோர்.
  • உடம்பை ‘சூன்யம்” என அழைத்தவர்கள் – பௌத்த மதத்தினர்.
  • உடம்பை ‘ஆன்மா” என அழைத்தவர்கள் – உலகவாதிகள்.
  • சிவஞானபோதத்தின் 4-ம் சூத்திரத்தில் மறுக்கப்படுவது – மதம்.
  • சிவஞானபோதத்தின் 3-ம் சூத்திரத்தின் பொருள்கள் – 1)ஆன்மா சூன்யமன்று 2)ஆன்மா பருவுடலன்று 3)ஐம்பொறிகள் ஆன்மா அல்ல 4)கனவுடலாக நுண்ணுடம்பு ஆன்மாஅன்று 5)பிராண வாயு ஆன்மா அன்று 6)பிரம்மம் ஆன்மா அன்று 7)உடம்பு முதலான கருவிகளின் கூட்டம் ஆன்மா அன்று.
  • “கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுபவர், மற்றீண்டு வாராநெறி” என 8-ம் சூத்திரப் பொருளை விளக்கும் நூல் – திருக்குறள்.
  • “ஓர்த்துள்ளம் உள்ள துணரின் ஒருதலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு” என 9-ம் சூத்திரப்பொருளை விளக்கும் நூல் – திருக்குறள்.
  • “சார்புணர்ந்து சார்பு கெட ஒழுகின் மற்றழித்து சார்தரா சார்தரு நோய்” – என 10-ம் சூத்திரப்பொருளை விளக்கும் நூல் – திருக்குறள்.
  • “தம்மை உணரார் உணரார், உடங்கியைந்து தம்மில் புணராமை கேளாம்புறன்” – சிவஞானபோதம்.

சிவஞானசித்தியார்

  • சிவஞானபோதத்தை தழுவி எழுதப்பட்ட நூல் – சிவஞானசித்தியார்.
  • சிவஞானசித்தியாருக்கு உரைஎழுதியவர்கள் – சிவஞானயோகியர், திருவாவடுதுறை ஆதீனத்தின் 16-ம் பட்டம்பெற்ற ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் ஆகியோர்.
  • சிவஞானசித்தியர் இரு பிரிவுகளை உடையது. அவை 1)சுபக்கம் 2)பரபக்கம்
  • சுபக்கம் என்பதன் பொருள் – தன் கொள்கை
  • சுபக்கம் விளக்குவது – சிவஞானபோதத்தின் பொருள்நிலை.
  • சுபக்கம் 328 சுபக்கம 328 விருத்தங்களால் ஆகியது.
  • சுபக்கத்திற்கு உரை எழுதியவர்கள் — நிரம்ப அழகியதேசிகர், மறைஞானதேசிகர், சிவாக்கியயோகி, ஞானப்பிரகாசர்.
  • பரபக்கம் என்பதன் பொருள் – பிற கொள்கைகளை மறுக்கும் கருத்து.
  • பரபக்கம் 301 விருத்தங்களால் ஆகியது.
  • பரபக்கத்திற்கு உரை எழுதியவர் — தத்துவப்பிரகாச தம்பிரான் சுவாமிகள்.
  • சிவஞானசித்தியாரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்கள் – டாக்டர் கிராண்ட், நல்லசாமிப்பிள்ளை, சிவராமன்.
  • சிவஞானசித்தியாரை இந்தியில் மொழிபெயர்த்தவர் – டீ.னு .ஜெயின்.
  • சிவஞானசித்தி சிவாகமர்த்தங்களுக்கெல்லாம் உரையாணி என செயப்பட்டு நிலவுவது” எனக் கூறியவர் – திராவிடமாபாடிய ஆசிரியர் சிவஞானசுவாமிகள்.
  • “பாரில் உள்ள நூலெல்லாம் பார்த்தரிய சித்தியிலே ஓர் விருத்தபாதி போதும்“ என சிவஞானசித்தியாரைப் பற்றி அருளியவர் – குருஞானசம்பந்தர்.

இருபா இருபது

  • குரு, மாணக்கனின் உரையாடல் முறையில் சைவ சித்தாந்த கருத்துக்களை கூறும் நூல் – இருபாஇருபது
  • இந்நூல் 20 செய்யுட்களாலானது. வெண்பா, ஆசிரியப்பா கலந்து அந்தாதி தொடை அமையப் பாடப்பட்டது.
  • இந்நூல் மெய்கண்டதேவரை வினவும் முகமாக பாடப்பட்டு உள்ளது.

திருவுந்தியார் 

  • இந்நூல் கி.பி.1147-ல் திருவியலூர் உய்யவந்ததேவநாயனாரால் இயற்றப்பட்டது.
  • இந்நூல் 45 கலித்தாழிசைகளால் ஆகியது.
  • இதில் முக்திமார்க்கம் பற்றி நன்கு விளக்கப்படுகிறது.
  • கேட்டல் ஞானம் அனுபவஞானமாய் முதிர்வதற்கு தேவையான இருவகை யோகப் பயிற்சிகள் 1)ஆதாரயோகம் 2)நிராதாரயோகம்.

திருக்களிற்றுப்படியார்

  • திருவுந்தியாரை தழுவி வந்த வழிநூல் – திருக்களிற்றுப்படியார்
  • இந்நூலை எழுதியவர் – திருக்கடவூர் உய்யவந்ததேவநாயனார் (திருவியலூர் உய்யவந்ததேவநாயனாரின் மாணக்கர்) காலம் கி.பி.1177.
  • இந்நூல் 100 வெண்பாக்களால் ஆகியது.
  • உபநிடதம், பிராமணங்கள், பகவத்கீதை ஆகிய மூன்றும் முதன்மையான பிராமண நூல்கள் என இந்நூல் கூறுகிறது.

உண்மைவிளக்கம்

  • சிந்தாந்த உண்மையை விளக்குவது – உண்மைவிளக்கம்
  • இந்நூல் 53 வெண்பாக்களால் ஆனது.
  • ‘மெய்க்கண்ட சந்தான அனுபவத்திரட்டு “ எனப்படுவது – உண்மைவிளக்கம்.
  • மெய்கண்டதேவரை அவரது மாணக்கர் வினவ அவர் விடை கூறி வருவது போல் வைத்து ஆக்கப்பட்ட நூலாகும்.
  • சைவ சாத்திரங்களை கற்றுணர விரும்புவோர் இந்நூலை முதற்கண் ஓதி உணர்தல் வேண்டும்.

சிவப்பிரகாசம்

  • சிவஞானபோதத்தின் சார்புநூல் — சிவப்பிரகாசம்
  • இதில் சைவநூல்களின் இயல்பும், தீட்சை வகைகளும் கூறப்பட்டுள்ளது.
  • இது பொது, சிறப்பு என இருவகைப்படும்.
  • இந்நூல் 100 விருத்தங்களை கொண்டது.
  • இது பதி, பசு, பாச இலக்கணம் பற்றி விளக்குகிறது.
  • ‘புறச்சமயத்தவருக்கு இருளாய்” ‘தொன்மைய ஆம் எனும் எவையும் நன்றாக” ‘நூலெனும் எவையும் தீதாகா” ஆகிய பாடல்வரிகள் உள்ள நூல் – சிவப்பிரகாசம்.

திருவருட்பயன்

  • செந்தமிழ் பொதுமறையாகிய திருக்குறளுக்கு ஒழிபு” என கொள்ளத்தக்க நூல் – திருவருட்பயன்.
  • இது பத்து அதிகாரங்களும், 100 பாடல்களும் கொண்டது.

வினா வெண்பா

  • இந்நூல் 13 வெண்பாக்களால் ஆகியது.
  • உமாபதி சிவனார் தம் ஆசியராகிய மறைஞானசம்பந்தரிடம் சாத்திர உண்மைகளை கேட்கும் விதமாக இந்நூல் அமைந்துள்ளது.

போற்றிப:.றொடை

  • தமக்கு சிவஞானம் நல்கிய குருமூர்த்தியை வாழ்த்தி பாடிய பாடல்கள் அடங்கியது.
  • உயிர்களுக்கு திருவருள் தொன்றுதொட்டு செய்துவரும் உபகாரங்களை எடுத்துக் கூறும் நூல் – போற்றிப:.றொடை
  • ஞானதீக்கையின் பயனையும், திருவைந்தெழுந்தின் ஓதும் முறையையும் இந்நூல் உரைக்கிறது.

கொடிக்கவி

  • ஒரு கட்டளை கலித்துறை மற்றும் நான்கு வெண்பாக்களும் அடங்கியது.
  • ஏறாத தில்லைக்கொடியை ஏற்றிய பாடல்கள்.(மொத்தம் – 5 பாடல்கள்)

நெஞ்சுவிடுதூது

  • ஆசிரியர் உமாபதிசிவனார் தம் குருவான மறைஞானசம்பந்தரிடம் மாலை வாங்கி வரும்படி தனது நெஞ்சை தூது விடும் முறையில் அமைய பெற்ற நூல்.

உண்மைநெறி விளக்கம்

  • தசகாரியங்களை விளக்குகிறது. முதலில் இதை எழுதியவர் உமாபதிசிவம் என கூறப்பட்டது. ஆராய்ச்சி முடிவில் இதை எழுதியவர் – சீர்காழிதத்துவநாதர் என்று அறியப்பட்டது.
  • இதனுடைய மூலநூல் – துகளறுபோதம்.
  • துகளறுபோதத்தை இயற்றியவர் – சீர்காழிச் சிற்றம்பலநாடிகள்
  • பரமுத்தி நிலையை எய்தும் நிலைகளை ‘ப10தப்பழிப்பு’ முதலாக ‘பரமானந்த அவசம்” வரை 30 அவதாரம் எனக் கூறுவது -துகளறுபோதம்
  • இதில் முதல் ஏழு பாச அவதாரம், பின் 15 பசு அவதாரம், இறுதி 8 பதி அவதாரம் எனவும் வகை செய்யப்பட்டு உள்ளது.
  • மெய்கண்ட நூல்களுடன் சேர்த்து அச்சிட்டு வழங்கும் நூல் – துகளறுபோதம்.

சங்கற்ப நிராகரணம்

  • வேற்று சமயங்களின் சந்தேக கருத்துக்களை சங்கற்பம் எனக் கூறி நிராகரிக்கிறது.
  • பரமுத்தி நிலையை அடையத் தலைப்படும் உயிர் மேற்கொள்ள வேண்டிய ஞான செய்திகளை விளக்குகிறது.
  • இந்நூல் 13 அகவற்பாக்களையும்ää ஒரு வெண்பாவையும் உடையது.
  • மெய்கண்ட நூல்களுள் இறுதி 8 நூல்களை எழுதியவர் – கொற்றவன்குடி உமாபதி சிவனார். இவருடைய ஆசிரியரான கடந்தை மறைஞான சம்பந்தர் எழுதியதாக கூறப்படும் நூல் — சதமணிக்கோவை.
  • சாலிவாகன ஆண்டு – 1235 (கி.பி.1313)
  • ‘சிவப்பிரகாசத்தின் பரபக்கம்” என அழைக்கப்படுவது – சங்கற்பநிராகரணம்.
  • சிவாத்துவித சைவம்” என அழைக்கப்படுவது – காரண  பரிணாமவாதம்.
  • ‘சுத்த சைவம்” என அழைக்கப்படுவது – சைவ வாதம்.

PDF Download

TNPSC சைவம் & வைணவம் பாடக்குறிப்புகள் Download

TNPSC Current Affairs in Tamil 2018

Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Facebook  Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்

1 COMMENT

  1. சைவ சித்தாந்தம் தொடர்பாக அருமையான விளக்கம் மிகவும்

    மாணவர்கள் அனைவரும் கற்று உணர வேண்டிய நூல்கள்
    நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!