TNPSC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 – உடனே விண்ணப்பியுங்கள்! முழு விபரம் இதோ!

0
TNPSC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 - உடனே விண்ணப்பியுங்கள்! முழு விபரம் இதோ!
TNPSC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 - உடனே விண்ணப்பியுங்கள்! முழு விபரம் இதோ!
TNPSC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022 – உடனே விண்ணப்பியுங்கள்! முழு விபரம் இதோ!

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கூட்டுறவுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை TNPSC தேர்வாணையம் அதன் அதிகாரப்பூர்வ இணையப்பக்கத்தில் வெளிட்டுள்ளது.

TNPSC வேலைவாய்ப்பு அறிவிப்பு:

தமிழகத்தில் அண்மையில் TNPSC தேர்வாணையம் போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் 22 வகையான போட்டித் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் குரூப் 2 மட்டும் குரூப் 4 தேர்வுகள் குறித்த அறிவிப்பு பிப்ரவரி மட்டும் மார்ச் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து TNPSC தேர்வில் புதிய மாற்றமும் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு துறைகளில் 100% தமிழக இளைஞர்களை நியமிக்கும் நோக்கில் அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது TNPSC தேர்வாணையம் கூட்டுறவு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கூட்டுறவுத்துறை:

உதவி இயக்குனர் – கூட்டுறவு தணிக்கை ஆகிய பணிகளில் 8 காலிப்பணியிடங்கள் உள்ளது. M.A(Co-operation) (Or) M.Com., with (Co-operation) (Or) M.Com., (without Cooperation) plus Higher Diploma in Co-operation (Or) ICAI ஆகிய கல்வி தகுதி முடித்தவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழக அரசில் ரூ.57,000 ஊதியத்தில் மருத்துவ துறை வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க பிப்.2 கடைசி நாள்!

மாதம் ரூ. 56,100 – 1,77,500 வரை ஊதியம் வழங்கப்படும். 2 கட்டமாக எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஜன.30 அன்று தேர்வு நடைபெறும். வணிகவியல் மற்றும் கணக்கியல் பாடப்பிரிவுகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.

இந்து சமய அறநிலையத்துறை:

செயல் அலுவலர் நிலை ஆகிய 4 காலிப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். ஏப்ரல் 23,24 ஆகிய தேதிகளில் எழுத்துத் தேர்வு மூன்று கட்டங்களாக நடைபெறும். கலை, அறிவியல், வணிகவியல் மற்றும் சட்டம் படிப்புகளில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 35 வயதிற்கு இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். பட்டியல் இனத்தவர்களுக்கு வயது வரம்பு கிடையாது. இந்து அறநிலையத்துறை சட்டங்கள் மற்றும் பொதுவான சட்டங்கள் போன்ற பாடப்பிரிவுகளில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!