TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – உடனே பாருங்க!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் தற்போது புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
செயலாளர்:
தமிழக அரசு துறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த TNPSC தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர் பணியிடங்கள் வெகு நாட்களாக நிரப்பப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் TNPSC தேர்வாணையத்தின் தலைவர் பதவிக்கு ஓய்வு பெற்ற காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபுவை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்தது.
TNPSC தேர்வுகள் 2023-24 – தேர்வர்களுக்கான ஜாக்பாட் தகவல்
இது தொடர்பான கோப்புகளை ஆளுநருக்கு அனுப்பியும் வைத்தது. ஆனால் இதுவரை ஆளுநர் ஒப்புதல் கிடைக்கவில்லை. இந்த நிலையில் TNPSC தேர்வாணைய செயலாளராக பணியாற்றிய உமா மகேஸ்வரி சில நாட்களுக்கு முன்னால் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து அவருக்கு பதிலாக தற்போது TNPSC தேர்வாணைய செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி கோபால சுந்தரராஜ் இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார்.