TNPSC தேர்வுகளில் முக்கிய மாற்றங்கள் – இனி முதல் தேர்வாக தமிழ் பாடத்தாள்!

0
TNPSC தேர்வுகளில் முக்கிய மாற்றங்கள் - இனி முதல் தேர்வாக தமிழ் பாடத்தாள்!
TNPSC தேர்வுகளில் முக்கிய மாற்றங்கள் - இனி முதல் தேர்வாக தமிழ் பாடத்தாள்!
TNPSC தேர்வுகளில் முக்கிய மாற்றங்கள் – இனி முதல் தேர்வாக தமிழ் பாடத்தாள்!

இந்த ஆண்டு நடைபெற இருக்கும் TNPSC போட்டித் தேர்வுகளில் தமிழ் பாடத்தாள் முதல் தேர்வாக நடத்தப்படும் எனவும், விடைத்தாள் மதிப்பீடு குறித்தும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தற்சமயம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ் பாடத்தாள்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் போட்டித் தேர்வுகள் இந்த ஆண்டு திட்டமிட்டபடி முழுமையாக நடத்தப்படவில்லை. அதாவது தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தீவிரமடைந்து வந்த கொரோனா 2 ஆம் அலை பரவல் காரணமாக TNPSC தேர்வுகளை நடத்த முடியவில்லை. இதற்கிடையில் தமிழகத்தில் நோய் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வந்ததையடுத்து இந்த தேர்வுகளை நடத்த தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

TNPSC வேலைவாய்ப்பில் பணியாளர்கள் தேர்வு முறை – முழு விபரங்கள் வெளியீடு!

அந்த வகையில் TNPSC தேர்வு கால அட்டவணையின் படி இம்மாதம் நடத்தப்பட வேண்டிய குரூப் 2, குரூப் 2A, குரூப் 4 தேர்வுகள் குறித்த அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் போட்டித்தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய சில முக்கிய நடைமுறைகளையும் TNPSC தேர்வாணையம் நேற்று (செப்டம்பர் 24) வெளியிட்டிருந்தது.

Best TNPSC Coaching Center – Join Now

இந்நிலையில் TNPSC போட்டித் தேர்வுகள் அனைத்திலும் தமிழ் பாடத்தாள் முதல் தேர்வாக நடத்தப்படும் என தேர்வு முறையில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதாவது தமிழ் பாடத்தாளை முதன்மையாக வைத்து TNPSC போட்டித் தேர்வுகள் நடத்தப்பட இருக்கிறது. மேலும் தேர்வர்கள் கட்டாயமாக தமிழ் பாடத்தாளில் குறைந்தபட்சம் 45 மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும். இந்த மதிப்பெண்களை பெற்றிருக்கும் தேர்வர்களுக்கு மட்டுமே அடுத்தகட்டமாக மற்ற தாள்களும் மதிப்பீடு செய்ய இருக்கிறது.

*All TNPSC Notification *
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!