TNPSC வேலைவாய்ப்பில் பணியாளர்கள் தேர்வு முறை – முழு விபரங்கள் வெளியீடு!

1
TNPSC வேலைவாய்ப்பில் பணியாளர்கள் தேர்வு முறை - முழு விபரங்கள் வெளியீடு!
TNPSC வேலைவாய்ப்பில் பணியாளர்கள் தேர்வு முறை - முழு விபரங்கள் வெளியீடு!
TNPSC வேலைவாய்ப்பில் பணியாளர்கள் தேர்வு முறை – முழு விபரங்கள் வெளியீடு!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படும் முறைகள் குறித்து முக்கிய அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டு உள்ளது. போட்டித் தேர்வர்கள் இதனை கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

TNPSC தேர்வு முறை:

முதனிலைத் தேர்வு என்பது விண்ணப்பதாரரை முதன்மை எழுத்துத் தேர்வுக்கு தெரிவு செய்து அனுமதிக்க நடத்தப்படும் ஒரு தேர்வாகும். முதன்மை எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்க தகுதியானவராக அறிவிக்கப்படும் விண்ணப்பதாரர் முதனிலைத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், அவரது இறுதித் தகுதியினை நிர்ணயிக்க கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. இணையவழி சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட பின்னரே முதன்மை எழுத்து தேர்விற்கு தகுதியுடைய விண்ணப்பதாரர் அனுமதிக்கப்படுவர்.

மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 28% ஆக உயர்வு – அமைச்சரவை ஒப்புதல்!

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு -I பொறுத்தமட்டில், முதன்மை எழுத்து தேர்வுக்கு அனுமதிக்கப்பட வேண்டிய விண்ணப்பதாரரின் எண்ணிக்கையானது, ஒவ்வொரு பதவிக்கும் தெரிவு செய்யப்பட வேண்டிய விண்ணப்பதாரரின் எண்ணிக்கையைவிட இருபது மடங்கு இருக்கும். ஏனைய தேர்வுகளை பொறுத்தமட்டில், முதன்மை எழுத்து தேர்வுக்கு அனுமதிக்கப்பட வேண்டிய விண்ணப்பதாரரின் எண்ணிக்கையானது, ஒவ்வொரு பதவிக்கும் தெரிவு செய்யப்பட வேண்டிய விண்ணப்பதாரரின் எண்ணிக்கையை போல பத்து மடங்கு இருக்கும்.

தேர்வாணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட விகிதாச்சாரம் தவிர முதன்மை எழுத்து தேர்விற்கு அனுமதிக்கப்பட வேண்டிய விண்ணப்பதாரரின் எண்ணிக்கையானது, நியமன ஒதுக்கீட்டு விதிகளுக்கும் உட்பட்டதாகும். எனினும் நியமன ஒதுக்கீட்டுக்குரிய ஒவ்வொரு வகுப்பு பிரிவிலும், தங்களது வகுப்பு பிரிவிற்கான கட்-ஆப் மதிப்பெண்களுக்கு சமமான மதிப்பெண்களை பெரும் அனைத்து விண்ணப்பதாரரும் முதன்மை எழுத்துத் தேர்விற்கு அனுமதிக்கப்படுவர். இதனால் முதன்மை எழுத்து தேர்விற்கு அனுமதிக்கப்பட வேண்டிய விண்ணப்பதாரரின் எண்ணிக்கையானது நிணயிக்கப்பட்ட விகிதத்தைவிட அதிகமாகலாம்.

முதன்மை எழுத்து தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நியமன ஒதுக்கீட்டு விதி ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர் மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் வாய்மொழி தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.

ஆதிதிராவிடர், ஆதிதிராவிட -அருந்ததியர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / சீர்மரபினர், இசுலாமியரல்லாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட இசுலாமிய வகுப்பினர் ஆகிய பணியிட ஒதுக்கீட்டிற்குரிய வகுப்பு பிரிவுகள் மற்றும் பொதுப்பிரிவுகளுள் எந்தெந்த வகுப்பு பிரிவுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட / அறிவிக்கப்பட்ட கலிப்பாணியிடங்களின் எண்ணிக்கை ஐந்து அல்லது அதற்க்கு மேற்பட்டதாக இருக்கிறதோ, அந்தந்த வகுப்பு பிரிவுகளில் வாய்மொழி தேர்வுக்கு அனுமதிக்கப்படும் விண்ணப்பதாரரின் எண்ணிக்கையானது அக்குறிப்பிட்ட வகுப்புபிரிவுகளில் நியமனம் செய்யப்படவுள்ள விண்ணப்பதாரரின் எண்ணிக்க்கையை போன்று இருமடங்காக இருக்கும் .

நியமனத்திற்குரிய காலியிடங்கள் எந்தெந்த வகுப்புப் பிரிவுகளில் நான்கு அல்லது அதற்கு குறைவாக உள்ளதோ,அந்த குறிப்பிட்ட வகுப்பு பிரிவுகளில் வாய்மொழி தேர்வுக்கு அனுமதிக்கப்படும் விண்ணப்பதாரரின் எண்ணிக்கையானது, அவ்வகுப்பு பிரிவுகளில் நியமனம் செய்யப்படவுள்ள விண்ணப்பதாரரின் எண்ணிக்க்கையை போன்று மூன்று மடங்காக இருக்கும்.

தமிழகத்தில் சுற்றுச்சூழல் அனுமதியின்றி மணல் எடுக்கலாம் – அரசாணை வெளியீடு!

விண்ணப்பதாரர் முதன்மை எழுத்து தேர்விலும், வாய்மொழி தேர்விலும் பெற்ற மொத்த மதிப்பெண்கள் மற்றும் நியமன ஒதுக்கீட்டு விதி ஆகியவற்றின் அடிப்படையில் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டு இறுதி தெரிவு செய்யப்படும்.

இணையவழி விண்ணப்பத்தில் கோரப்பட்ட உரிமைகோரல்களின் அடிப்படையில், விண்ணப்பதாரர் எழுத்து தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். எழுத்து தேர்வு முடிவுகளின் அடிப்படையில் விண்ணப்பதாரர் இணையவழி சான்றிதழ் சரிபார்ப்பிற்க்கு அனுமதிக்கப்படுவர். இணையவழி சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின்னர் எழுத்து தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் , நியமன ஒதுக்கீட்டு விதி பொருந்தும் இடங்களில் அதனை பின்பற்றி, விண்ணப்பதாரர் மூலச்சான்று சரிபார்ப்பு மற்றும் வாய்மொழி தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.

நியமன ஒதுக்கீட்டு விதி பொருந்தாத, ஒரேயொரு பணியிடத்தை மட்டும் கொண்ட பதவிகளை பொறுத்தவரை, எழுத்து தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் வாய்மொழி தேர்வுக்கு அனுமதிக்கப்படும் விண்ணப்பதாரரின் எண்ணிக்கை மூன்றாக இருக்கும்.

*All TNPSC Notification Pdf*

விண்ணப்பதாரர் எழுத்து தேர்விலும், வாய்மொழித் தேர்விலும் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் , நியமன ஒதுக்கீட்டு விதி பொருந்தும் எனில் அதனை பின்பற்றி, கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டு இறுதி தெரிவு செய்யப்படும்.

SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஆன்லைனில் கிரெடிட் கார்டு பின் உருவாக்கம்!

விண்ணப்பதாரர் முதன்மை எழுத்து தேர்வின்/ எழுத்து தேர்வின் அனைத்து பாடங்களிலும் , வாய்மொழித் தேர்விலும் கலந்து கொள்வது கட்டாயமாகும் . முதன்மை எழுத்து தேர்வின்/ எழுத்து தேர்வின் ஏதேனும் ஒன்று அல்லது அதற்க்கு மேற்பட்ட பாடங்களில் தேர்வெழுதாத விண்ணப்பதாரர் அத்தெரிவுக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை பெற்றிருந்தாலும்கூட தெரிவு செய்வதற்கு தகுதியானவராக கருதப்பட மாட்டார்.

வாய்மொழி தேர்வில் பங்கு பெற்ற விண்ணப்பதாரர் எழுத்து தேர்விலும் , வாய்மொழி தேர்விலும் அக்குறிப்பிட்ட பதவிக்கான வாய்மொழித் தேர்வு நடைபெறும் நாட்களின் இறுதி நாளன்று மாலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதள முகவரியில் www.tnpsc.gov.in வெளியிடப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!