TNPSC Group 7 & 8 தகுதி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான அறிவிப்பு!

0
TNPSC Group 7 & 8 தகுதி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான அறிவிப்பு!
TNPSC Group 7 & 8 தகுதி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான அறிவிப்பு!
TNPSC Group 7 & 8 தகுதி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு நடத்தும் தகுதி தேர்வுகளுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்களது EXAMS DAILY வலைதளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி கொண்டு வருகிறது. தற்போது நடைபெற உள்ள மாதிரி தேர்வு பற்றிய முழுமையான விவரங்களும் எளிமையான முறையில் இப்பதிவில் வழங்கப்பட்டுள்ளது. இந்த தகுதி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கும் அனைவரும் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்தி கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Group 7 & 8 மாதிரி தேர்வு பற்றிய விவரம்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் (TNPSC) நடத்தும் தகுதி தேர்வுகள் மூலம் தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழுள்ள அனைத்து இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள Grade- III, IV கீழ் வரும் Executive Officer பணிகளுக்கான பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள். இதனை தொடர்ந்து இந்த வருடமும் இந்து சமய அறநிலையத்துறையில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை நிரப்பும் பொருட்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் (TNPSC) ஆனது அதற்கான தகுதி தேர்வை நடத்த உள்ளது. மேலும் இந்த தகுதி தேர்வானது Paper I and Paper II என இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகுதி தேர்வுக்கு 10 ம் வகுப்பு முதல் Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வுக்கு 18.06.2022 அன்று வரை விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன. மேலும் இந்த தேர்வில் ஒரு பிரிவாக (paper II) உள்ள இந்து மதம் சைவம் மற்றும் வைணவம் தேர்வானது 10.09.2022 மற்றும் 11.09.2022 ஆகிய தினங்களில் நடைபெற உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தேர்வுக்காக பதிவு செய்த நபர்கள் தங்களை தயார் படுத்திக் கொண்டு இருக்கின்றனர். இந்த தகுதி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருப்பவர்களுக்கு உதவும் வகையில் எங்களது Exams Daily வலைத்தளமானது மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது.

தற்போது நடைபெற்று வரும் மாதிரி தேர்வுகளை தொடர்ந்து எங்களது Exams Daily வலைத்தளமானது நாளை (22.07.2022) காலை 10.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை Online மூலம் Group 7 & 8 இந்து மதம் சைவம் மற்றும் வைணவம் 15 தேர்வுக்கான மாதிரி தேர்வை இலவசமாக நடத்த முடிவு செய்துள்ளது. இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்வதற்கான இணைப்பானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகுதி தேர்வுக்கு தயாராகி கொண்டு இருக்கும் அனைவரும் இந்த மாதிரி தேர்வில் தவறாது கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!