TNPSC GROUP 4 & VAO 2024 தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? – நெருங்கும் இறுதி நாட்கள்!

0
TNPSC GROUP 4 & VAO 2024 தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? - நெருங்கும் இறுதி நாட்கள்!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் விண்ணப்ப விவரங்கள் குறித்து இப்பதிவில் நாம் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

குரூப் 4 தேர்வு விவரங்கள்:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2024ஆம் ஆண்டு குரூப் 4 மற்றும் விஏஓ பணிகளுக்கு 6244 காலி பணியிடங்கள் உள்ளதாக ஜனவரி 30 ஆம் தேதி அன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இப்பணிகளில் நடப்பாண்டு வன காவலர் மற்றும் கண்காணிப்பாளர் பணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு கல்வித் தகுதியை கொண்ட 18 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் குரூப்-4 தேர்வில் கலந்து கொள்ளலாம். அரசின் அறிவிப்பின்படி பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி குரூப் 4 தேர்வுக்கு  விண்ணப்பிக்க இறுதி நாள் ஆகும்.

TNPSC தேர்வில் எளிதாக ஜெயிக்கலாம் வாங்க – சூப்பர் வழிமுறைகள்!

அதன்படி தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு வாரம் மட்டுமே கால அவகாசம் உள்ளதால் விண்ணப்பிக்க விருப்பம் உள்ள தேவர்கள் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். குரூப் 4 தேர்வின் அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் ஆகியவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் இதனை பயன்படுத்தி பயனடைந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!