TNPSC குரூப் 2 தேர்வில் 5,831 காலிப்பணியிடங்கள் 2022 – பதவிகள், வயது வரம்பு, கல்வித்தகுதி!

0
TNPSC குரூப் 2 தேர்வில் 5,831 காலிப்பணியிடங்கள் 2022 - பதவிகள், வயது வரம்பு, கல்வித்தகுதி!
TNPSC குரூப் 2 தேர்வில் 5,831 காலிப்பணியிடங்கள் 2022 - பதவிகள், வயது வரம்பு, கல்வித்தகுதி!
TNPSC குரூப் 2 தேர்வில் 5,831 காலிப்பணியிடங்கள் 2022 – பதவிகள், வயது வரம்பு, கல்வித்தகுதி!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று (Group 2 & 2A) தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 5,831 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வு குறித்த கல்வித்தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விபரங்களை இந்த பதிவில் காணலாம்.

Group 2 & 2A தேர்வு:

தமிழகத்தில் பல்வேறு அரசுப் பணிகளுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் TNPSC தேர்வாணையத்தால் நடத்தப்படும் Group 2 & 2A தேர்வின் மூலம் காலியாக உள்ள 5,831 பணியிடங்களை நிரப்பும் விதமாக இன்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனால் விரைவில் தேர்வுகள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் Group 2 & 2A தேர்விற்கான பதவி, வயது வரம்பு மற்றும் கல்வித்தகுதி உள்ளிட்ட விபரங்களை இந்த பதிவில் காணலாம்.

TNPSC குரூப் 4 VAO 5,255 காலிப்பணியிடங்கள் 2022 – தேர்வு மாதிரி, வயது வரம்பு, கல்வித்தகுதி!

Group 2 & 2A தேர்வு மூலம் Industrial Co-operative Officer, Probation Officer, Junior Employment Officer, Assistant Inspector of Labour, Sub Registrar, Grade-II, Assistant Section Officer, Supervisor of Industrial Co-operatives, Audit Inspector உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதியானது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். குரூப் 2 தேர்வானது முதல்நிலை தேர்வு , முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் பணி தேர்வு செய்யப்படும்.

TNPSC குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் 2022 அறிவிப்பு – புதிய விதிமுறைகள் வெளியீடு!

அதனை தொடர்ந்து குரூப் 2A தேர்வானது முதல்நிலை தேர்வு மற்றும் முதன்மை தேர்வு மூலம் மட்டுமே தேர்வு செய்யப்படுகிறது. இத்தகைய Group 2 & 2A தேர்வானது கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்றின் காரணமாக நடத்தப்படவில்லை. கொரோனா குறைந்து வருவதை தொடர்ந்து TNPSC தேர்வாணையம் நீண்ட நாட்களாக எதிர்பாத்திருந்த Group 2 & 2A தேர்வுக்கான முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. இது தேர்வர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!