தமிழக அரசின் TNPL நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்க ஜன.27 கடைசி நாள்!

0
தமிழக அரசின் TNPL நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்க ஜன.27 கடைசி நாள்!
தமிழக அரசின் TNPL நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்க ஜன.27 கடைசி நாள்!
தமிழக அரசின் TNPL நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்க ஜன.27 கடைசி நாள்!

தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப பல்வேறு அறிவிப்புகளை அரசு வெளியிட்டு வருகிறது. இதனை தொடர்ந்து டிஎன்பிஎல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் சில தகவல்களை பார்க்கலாம்.

வேலைவாய்ப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஏராளமானோர் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர். அதனால் தமிழகத்தில் வேலையில்லா நிலையை உருவாக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதில் குறிப்பாக அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தமிழகத்தில் வரும் சனிக்கிழமை (ஜன.22) பள்ளி ஆசிரியர்களுக்கு விடுமுறை – அரசு அறிவிப்பு!

அத்துடன் இப்பணிக்கு விண்ணப்பிக்க பட்டதாரிகள் சிஏ, சிஎம்ஏ, எம்பிஏ, பிஇ, பி.டெக், முதுநிலை பட்டதாரிகள், எம்பிபிஎஸ் உள்ளிட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு 25 வயது முதல் 57 வயது நிரம்பியவர்கள் வரை விண்ணப்பித்து கொள்ளலாம். மேலும் அரசு அறிவித்தப்படி குறிப்பிட்ட வகுப்பினர்களுக்கு வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்படும். இப்பணிக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதன் மூலமாக இப்பணிக்கு நியமிக்கபடுபவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.90,800 முதல் 3,46,015 லட்ச ரூபாய் வரை வழங்கப்படுகிறது.

இதையடுத்து இப்பணிக்கு விண்ணப்பிக்க https://www.tnpl.com/ என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். இந்த பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை Executive Director (Operations), Tamil Nadu Newsprint and Papers Limited, No.67, Mount Road, Guindy, Chennai-600 032, Tamil Nadu என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாக ஜனவரி 27ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை பெற  https://www.tnpl.com/ அல்லது  https://tnpl.b-cdn.net/wp-content/uploads/2022/01/Download-Advt-Details.pdf என்ற லிங்க் கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

தற்போது TNPL நிறுவனத்தில் உள்ள பணியின் பெயர் மற்றும் காலிப்பணியிடத்தை பற்றிய விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

  • பணியின் பெயர்: Executive Director (Finance) / Chief General Manager (Finance) –
  • காலிப்பணியிடம்: 1

 

  • பணியின் பெயர்: Chief General Manager (Production)-Paper / General Manager (Production)-Paper
  • காலிப்பணியிடம்: 1

 

  • பணியின் பெயர்: Assistant Manager (Security)
  • காலிப்பணியிடங்கள்: 3

 

  • பணியின் பெயர்: Medical Officer (Assistant Officer grade)
  • காலிப்பணியிடம்: 1

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!