TNMAWS 1993 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு – முக்கிய கேள்விகள் இதோ!!
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறையின் கீழ் 1993 காலிப்பணியிடங்களை கொண்ட பல்வேறு பதவிகளுக்கு கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது. அதற்கான தேர்வுகள் வரும் 29 & 30 ஜூன் ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது. இதற்கு தயாராவோருக்கு உரிய தமிழ் தகுதித் தேர்வின் முக்கிய சில கேள்விகளை வழங்கியுள்ளோம். அவற்றை படித்து பயன் பெற வாழ்த்துகிறோம்.
1) Forest Conservator-இச்சொல்லுக்கு இணையான தமிழ்க் கலைச்சொல் தேர்க
(A) வனவியல் ஆராய்ச்சியாளர்
(B) வனவியல் நிபுணர்
(C) வனத்துறை அலுவலர்
(D) வனப் பாதுகாவலர்
(E) விடை தெரியவில்லை
2. TRANSLATION’ – என்பதற்கு இணையான கலைச்சொல் தருக.
(A) மொழிபெயர்ப்பு
(B) சீர்திருத்தம்
(C) விழிப்புணர்வு
(D) கதைப்பாடல்
(E) விடை தெரியவில்லை.
3. பாரதியின் பாடல்கள் உள்ளங்கை நெல்லிக் கனிப் போல அனைவருக்கும் விளங்கும் உவமையின் பொருளை எழுதுக.
(A) ஒற்றுமையின்மை
(B) வெளிப்படைத் தன்மை
(C) தடையின்றி மிகுதியாக
(D) எளிதில் மனத்தில் பதிதல்
(E) விடை தெரியவில்லை
4) உவமையின் பொருளறிந்து சரியான தொடரை எழுதுக.
உடலும் உயிரும் போல
(A) எளிதில் மனதில் பதிதல்
(B) இணைபிரியாமை
(C) பயனற்ற நிகழ்வு
(D) எதிர்பாராத நிகழ்வு
(E) விடை தெரியவில்லை
5. ‘நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற் போல’ என்ற உவமைக்கு ஏற்ற பொருள் தருக .
(A) வேற்றுமையில் ஒற்றுமை
(B) வெளிப்படைத்தன்மை
(C) ஒற்றுமையின்மை
(D) எதிர்பாராத நிகழ்வு
(E) விடை தெரியவில்லை
விடைகள்:
1-D, 2-A, 3-B, 4-B, 5-C
Join Our WhatsApp
Channel ” for the Latest Updates
ESIC கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு 2024 – 45 காலிப்பணியிடங்கள்!