தமிழகத்தில் ஜூலை 29 வரை இந்த பகுதிகளில் மழை பெய்யும் – வானிலை அறிக்கை!

0
தமிழகத்தில் ஜூலை 29 வரை இந்த பகுதிகளில் மழை பெய்யும் - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் ஜூலை 29 வரை இந்த பகுதிகளில் மழை பெய்யும் - வானிலை அறிக்கை!
தமிழகத்தில் ஜூலை 29 வரை இந்த பகுதிகளில் மழை பெய்யும் – வானிலை அறிக்கை!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில்‌ இன்று கோயமுத்தூர்‌, தேனி, மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன மழையும்‌, ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ மிதமான மழையும்‌, தென்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌, எஞ்‌சிய மாவட்டங்களில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலையும்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

26.07.2021: மேற்கு தொடர்ச்‌சி மலையை ஒட்டிய மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌, எஞ்சிய மாவட்டங்களில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலையும்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் முக்கிய உத்தரவு!

27.07.2021: மேற்கு தொடர்ச்‌சி மலையை ஒட்டிய மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌, எஞ்ிய மாவட்டங்களில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலையும்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

28.07.2021 முதல்‌ 29.07.2021: மேற்கு தொடர்ச்சி மலையை ஓட்டிய மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌, கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான மழையும்‌, எஞ்சிய மாவட்டங்களில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலையும்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான மழையும்‌ நிலவக்‌ கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌, அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்‌சியஸை ஒட்டி இருக்கும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

வங்கக்கடல்‌ பகுதிகள்‌:

25.07.2021: மன்னார்‌ வளைகுடா பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

25.07.2021, 26.07.2021: தெற்கு வங்க கடல்‌ மற்றும்‌ தெற்கு அந்தமான்‌ கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

தமிழக அரசின் ரூ.4000, மளிகை பொருட்களை வாங்காதவர்கள் கவனத்திற்கு – இறுதி வாய்ப்பு!

27.07.2021 முதல்‌ 29.07.2021 வரை தெற்கு வங்க கடல்‌ மற்றும்‌ அதனை ஓட்டிய மத்திய வங்க கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

அரபிக்கடல்‌ பகுதிகள்‌:

25.07.2021 முதல்‌ 27.07.2021 வரை: தென்‌ மேற்கு அரபிக்கடல்‌, மத்திய மேற்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ இடைஇடையே 60 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

மீனவர்கள்‌ மேற்குறிப்பிட்ட தேதிகளில்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!