தமிழகத்தில் 1 முதல் 8 வரை அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை ஆலோசனை!!

1
தமிழகத்தில் 1 முதல் 8 வரை அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு - கல்வித்துறை ஆலோசனை!!
தமிழகத்தில் 1 முதல் 8 வரை அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு - கல்வித்துறை ஆலோசனை!!
தமிழகத்தில் 1 முதல் 8 வரை அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை ஆலோசனை!!

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை தொடங்க பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இதற்கு சுகாதாரத்துறை ஒப்புதல் கிடைத்தவுடன் முடிவு எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

பள்ளிகள் திறப்பு ஆலோசனை:

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்த காரணத்தால் கல்வி நிறுவனங்கள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், 9, 11ம் வகுப்புகளுக்கு கடந்த பிப்ரவரி 8 முதல் நேரடி வகுப்புகள் தொடங்கி உள்ளன. மேலும் அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களும் திறக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் மீதமுள்ள 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

புதுச்சேரியில் கடந்த ஒரு மாதமாக அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வரும் போதிலும், கொரோனா பரவல் இல்லை என்பது பரிசோதனை மற்றும் ஆய்வுகளின் மூலம் தெளிவாகி உள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்திலும் 1 முதல் 8 வரை அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கருதுகின்றனர். இதற்கான வரையறை திட்டம் தற்போது தயார் செய்யப்பட்டு சுகாதாரத்துறையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அதற்கு அனுமதி கிடைத்தவுடன் தான் இது குறித்து முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது.

தமிழகத்தில் 159 ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு – பெயர் பட்டியல் வெளியீடு!!

இது தொடர்பாக பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், மாணவர்கள் விளையாட்டிலும், ஊர் சுற்றுவதிலும் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதால், விரைவில் பள்ளிகளை திறந்து வகுப்புகளை தொடங்கா விட்டால், படிப்பை மறந்து விடுவர். பெற்றோர்களோ கொரோனாவை காரணமாக வைத்து பள்ளிகள் திறப்பை தள்ளி போடக்கூடாது என கூறுகின்றனர். அதுமட்டுமின்றி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அழைத்துச் செல்லும் போது, பள்ளிக்கு அனுப்புவதில் சிக்கல்கள் இருக்காது எனவும் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!