தமிழகத்தில் 1ம் வகுப்பு மாணவர் சேர்க்கை விவகாரம் – விரைவில் வெளியாகும் அறிவிப்பு!

0
தமிழகத்தில் 1ம் வகுப்பு மாணவர் சேர்க்கை விவகாரம் - விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
தமிழகத்தில் 1ம் வகுப்பு மாணவர் சேர்க்கை விவகாரம் - விரைவில் வெளியாகும் அறிவிப்பு!
தமிழகத்தில் 1ம் வகுப்பு மாணவர் சேர்க்கை விவகாரம் – விரைவில் வெளியாகும் அறிவிப்பு!

தமிழகத்தில் இதுவரை 5 வயது நிரம்பிய குழந்தைகள் 1ம் வகுப்பில் சேர்க்கப்பட்டு வந்தனர். இந்த முறையில் மாற்றம் வரலாம் என்று தகவல்கள் வந்துள்ளது. இது குறித்த அறிவிப்பு ஜூன் மாதத்திற்குள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

வயது வரம்பு:

தமிழக பள்ளிகளில் 1ம் வகுப்பு சேர்க்கைக்கு மாணவர்களுக்கு 5 வயது நிரம்பியிருக்க வேண்டும். இதுவரை 5 வயது நிரம்பிய குழந்தைகள் மட்டுமே 1ம் வகுப்பில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் குழந்தைகளை பள்ளிகளில் 1ம் வகுப்பில் சேர்க்க 6 வயது நிரம்பியிருக்க வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

TNPSC Accounts Officer இறுதி கட்ட தேர்வு விடைக்குறிப்பு – வெளியீடு !

இது குறித்து அண்மையில் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியது. இந்த நிலையில் தமிழகத்தில் 1 – ம் வகுப்பு மாணவர் சேர்க்கை வயது மாற்றப்படுமா? என்ற கேள்வி எழுந்து வருகிறது. தற்போது தமிழக அரசு மாநில கல்விக்கொள்கையை தயாரித்து வருகின்றது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

தற்போது மாநில கல்விக்கொள்கை உருவாக்கும் குழுவானது 1ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைமுறை குறித்த பரிந்துரையை அரசுக்கு அளிக்கவுள்ளது. இதனையடுத்து 2023 – 2024ம் கல்வியாண்டு தொடங்குவதற்கு முன் அதாவது ஜூன் மாதத்திற்குள் 1 – ம் வகுப்பு மாணவர் சேர்க்கை வயது வரம்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் வந்துள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!