தமிழகத்தில் மாலை 5 மணிவரை கடைகளை திறக்க அனுமதி – ஜூன் 14 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு!

13
தமிழகத்தில் மாலை 5 மணிவரை கடைகளை திறக்க அனுமதி - ஜூன் 14 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு!
தமிழகத்தில் மாலை 5 மணிவரை கடைகளை திறக்க அனுமதி - ஜூன் 14 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு!
தமிழகத்தில் மாலை 5 மணிவரை கடைகளை திறக்க அனுமதி – ஜூன் 14 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு!

தமிழகம் முழுவதும் தற்போது அமலில் இருக்கும் முழு ஊரடங்கு உத்தரவானது தளர்வுகள் உடன் ஜூன் 14 வரை மேலும் 1 வாரத்திற்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் மாலை 5 மணி வரை மளிகை கடைகள் திறப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு வீதமானது தொடர்ந்து உயர்ந்து வருவதால், நோய் தடுப்பு கட்டுப்பாடுகளாக ஜூன் 14 ஆம் தேதி வரை முழு ஊரடங்கை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மே மாதம் 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை 2 வாரங்களுக்கு தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு உத்தரவானது அமல்படுத்தப்பட்டது.

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் ஜூன் 7 முதல் எதற்கெல்லாம் அனுமதி? முழு விபரங்கள் இதோ!

இதை தொடர்ந்து கொரோனா பரவல் வீதம் அதிகரித்து வந்ததை கவனத்தில் கொண்டு மே 24 ஆம் தேதிக்கு மேல் ஜூன் 7 ஆம் தேதி வரை தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு வீதமானது அதிகமாக காணப்பட்டு வருவதால், நோய் தடுப்பு கட்டுப்பாடுகளாக ஜூன் 14 வரை சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதன் படி அத்தியாவசிய செயல்பாடுகளான காய்கறி, மளிகை கடைகள் இயங்குவதற்கு காலை 6 முதல் மாலை 5 மணி வரை அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நேரங்களில் பூக்கடைகள், மீன் சந்தைகள், இறைச்சி கடைகள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு அலுவலகங்களும் 30% பணியாளர்ளுடன் இயங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தொழிற்சாலைகள் அனைத்தும் 50% பணியாளர்களுடன் இயங்கலாம்.

13 COMMENTS

  1. Ippdi ye lockdown pottu kitte irruga romba nalla irrukum ea da enga uyira vaanguriga ..ezhaiga vazhkaila nalla vilaiyaduriga da romba nalla varuviga vazhthukal

  2. அதான் ஒரு முடிவோட இருக்காங்க…… வாங்குன கடன்’லாம் எப்படி அடைக்குறது….. ரெண்டு வருசமா ஊரடங்கு ஊரடங்குனு போட்டு சாக அடிக்கறாங்க….. முடியல 😭😭😭😭

  3. முட்டாள் தனமான லாக்டோன். சிறு குறு தொழில் செய்வோர் அன்றாட கூலி வாங்கும் எழை எளிய மக்கள் இவர்களை சாகா இவர்களின் நோக்கம். கூடவே கழக தோழர்கள் நாட்டு சொத்தை கொள்ளை அடிக்க முயற்சி

  4. இப்பொழுது தான் படிப்படியாக கொரானா பாதிப்பு குறைந்து வருகிறது.அனைத்து கடைகளும் மதியம் இரண்டு மணிவரை வைத்திருந்தால் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்.

  5. வேறு மாவட்டத்திற்கு‌ செல்ல இ பாஸ் ல அதற்கான‌ காரணம் இல்ல என்ன பன்ன?

  6. நடை முறைபடுத்தி டாஸ்மாக் கடையை திறப்பது நலம்,
    கடந்த ஆட்சியை போன்று அல்லாமல் இருப்பது சந்தோசம்,
    அரசுக்கு வருமானத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!