பேருந்து பயணிகள் கவனத்திற்கு – சென்னையின் 6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

0
பேருந்து பயணிகள் கவனத்திற்கு - சென்னையின் 6 இடங்களில் இருந்து
பேருந்து பயணிகள் கவனத்திற்கு - சென்னையின் 6 இடங்களில் இருந்து
பேருந்து பயணிகள் கவனத்திற்கு – சென்னையின் 6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!

வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையின் 6 முக்கிய இடங்களில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சிறப்பு பேருந்துகள்

வழக்கமாக, தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பும் நபர்களுக்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது உண்டு. அதன்படி, இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இந்த சிறப்பு பேருந்து சேவைகள் ஜனவரி 12 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை வழங்கப்பட இருக்கிறது.

திருப்பதி கோவில் சொர்க்கவாசல் தரிசனம் – பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

Telegram Updates for Latest Jobs & News – Join Now

  • அந்த வகையில், ஆந்திரா செல்லும் நபர்கள் சென்னை மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து தங்களது பயணங்களை மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அதே போல, புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் பகுதிகளுக்கு, சென்னை கே கே நகர் மாநகர பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
  • தாம்பரம் மெப்ஸ் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து, பண்ருட்டி, கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.
  • திருவண்ணாமலை, காட்டுமன்னார் கோவில், செஞ்சி செல்லும் நபர்கள் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் இருந்து பேருந்து வசதிகளை பெறலாம்.
  • சென்னை பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர், திருப்பத்தூர், காஞ்சீபுரம், ஓசூர் மற்றும் திருப்பதிக்கு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • சென்னையில் இருந்து மயிலாடுதுறை, நாகை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!