தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை – ஆட்சி அமைக்கப்போவது யார்?

0
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை - ஆட்சி அமைக்கப்போவது
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை - ஆட்சி அமைக்கப்போவது
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை – ஆட்சி அமைக்கப்போவது யார்?

தமிழகத்தில் 2021ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவு நாளை (மே 2 ஆம் தேதி) வெளியிடப்பட உள்ளது.

சட்டபேரவை தேர்தல்:

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் தமிழகம் உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் கடந்த நாட்களில் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் தற்போதுள்ள சட்டப்பேரவையின் ஆட்சிக்காலம் மே 24 ஆம் தேதி முடிவுறுகிற சூழலில், அடுத்த சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தேதிகளை தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டார்.

ESIC நிறுவனத்தில் 6552 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!!

அது முதல் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியது. தமிழகத்தில் ஆண்டாண்டு காலமாக முன்னணி கட்சியாக இருந்து வரும் திமுக, அதிமுக, தேமுதிக, காங்கிரஸ், பாஜக கட்சிகளுடன் மநீம போன்ற புதிய கட்சிகள் பலவும் தேர்தலுக்கு தயாராகின. அனல் தெறிக்க வைக்கும் அளவுக்கு இந்த கட்சிகளின் தேர்தல் பிரச்சாரங்கள் காணப்பட்டது. அனைத்து கட்சிகளும் மக்களை கவரும் விதத்தில் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி கொடுத்தது. தொடர்ந்து தேர்தல் ஆணையம் அறிவித்தபடி ஏப்ரல் 6 ஆம் தேதி பலத்த கட்டுப்பாடுகளுடன் தமிழகம் 11 ஆவது சட்டமன்ற தேர்தலை சந்தித்தது.

இந்த தேர்தலில் 234 தொகுதிகளில் மொத்தம் 4024 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் 1000 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தல் அன்று காலை 7 மணி துவக்கி மாலை 7 மணி வரை 88,937 வாக்கு மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தல் பணிகளில் துணை ராணுவப்படையினர், அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் பெருமளவு ஈடுபட்டனர்.

சுமூகமாக முடிவுற்ற இந்த தேர்தலில் 234 தொகுதிகளிலும் ஏறத்தாழ 71.79% வாக்குகள் பதிவானது. தவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு, முன்னதாகவே தபால் வாக்குப்பதிவுகளும் துவங்கி நடைபெற்றது. இந்நிலையில் தமிழக சட்டபேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அறிவிக்கப்பட்டபடி, நாளை மே 2 ஆம் தேதி துவங்குகிறது. நாளை நடைபெறப்போகும் வாக்கு எண்ணிக்கை பணிகளிலும் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட உள்ளது. அதன்படி அடுத்த 5 ஆண்டுகளுக்கு தமிழகத்தை ஆளப்போவது யார்? என்ற அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது.

TN Job “FB  Group” Join Now

India Today-Axis My India நிறுவனத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளின் படி, திமுக கூட்டணி: 175-195, அதிமுக கூட்டணி 38-54, அமமுக கூட்டணி – 1-2, ம.நீ.ம கூட்டணி – 0-2, மற்றவை – 0 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மே 2 (நாளை) காலை 8 மணி முதலே வாக்கு எண்ணும் பணிகள் தொடங்க உள்ள நிலையில், பிற்பகல் முதலே முன்னிலை விபரங்கள் வெளி வர தொடங்கும். தமிழக தேர்தல் முடிவுகளை உடனடியாக தெரிந்து கொள்ள நமது Tamil Examsdaily வலைத்தளத்துடன் இணைந்திருங்கள்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!