TN 12th Result 2021 (Out) | தமிழக +2 மதிப்பெண்கள் வெளியீடு – Live Update

0
தமிழக +2 மதிப்பெண்கள் இன்று வெளியீடு -
தமிழக +2 மதிப்பெண்கள் இன்று வெளியீடு -

தமிழக +2 மதிப்பெண்கள் இன்று வெளியீடு – Live Update

தமிழகத்தில் இன்று 12ம் வகுப்பு மாணவர்களின் இறுதி மதிப்பெண்கள் தற்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சரால் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை மாணவர்கள் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்தது கொள்ளலாம்.

TN HSC Result 2021:

தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. இதனால் மாணவர்கள் ஆன்லைன் வகுப்பு மூலம் பாடங்களை கற்றனர். தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதத்தில் பொதுத்தேர்வு நடத்த அரசு முடிவு செய்தது. தொடர்ந்து கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் பாதிப்புகள் காரணமாக பொதுத்தேர்வுகளை ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்தது. இதனால் மாணவர்களுக்கு மாற்று முறையில் மதிப்பெண் வழங்க திட்டமிடப்பட்டது.

TN 12th Marks Details:

12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க வழிகாட்டு குழு ஒன்றை அரசு நியமித்தது. அதன்படி, 12ம்,வகுப்பு மாணவர்களுக்கு 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 3பாடங்களின் சராசரி மதிப்பெண்ணில் 50%, 11ம் வகுப்பு தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் எழுத்து தேர்வில் 20% மற்றும் 12ம் வகுப்பில் அகமதிப்பீடு முறையில் 30% மதிப்பெண்கள் வழங்க அரசு ஒப்புதல் அளித்தது. மேலும், மதிப்பெண் தசம விகிதத்தில் வந்தால் அதனைஅப்படியே பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் உயர்கல்வியில் சேருவதற்கு ஏற்ப கட்-ஆப் மதிப்பெண்களை அவர்களின் மதிப்பெண் கூட்டுத்தொகையுடன் அப்படியே தசம எண்ணில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

TN 12th Result Date 2021:

கடந்த வாரம் மதிப்பெண் வழங்கும் பணிகள் முடிவடைந்த இலையில், தேர்வு முடிவுகள் ஜூலை 19ம் தேதி வெளியிட இருப்பதாக அரசு அறிவிடத்த்து. அதன்படி, இன்று காலை 11 பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி சென்னை தேர்வுத்துறை அலுவலகத்தில் தேர்வு முடிவுகளை வெளியிடுகிறார். பள்ளி மாணவர்கள் தங்கள் பதிவு எண்,பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து இணைய தளம் மூலம் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

மேலும், தேர்வு முடிவுகள், www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in என்ற இணைய தளங்களில் வெளியிடப்படும். மாணவர்கள் பள்ளியில் பதிவு செய்துள்ள தங்களின் மொபைல் எண்ணுக்கு முடிவுகள் நேரடியாக அனுப்பி வைக்கப்படும். மாணவர்கள் தங்களுக்கான மதிப்பெண் சான்றுகளை, 22ம் தேதி காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in, www.dge.tn.nic.in என்ற இணைய தளங்களில் தங்களின் பதிவு எண், பிறந்த தேதியை பதிவு செய்து தங்களின் மதிப்பெண் பட்டியல்களை தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download TN 12th Result – Released 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!