TMB தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலை – நல்ல சம்பளம்.. விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க !
தமிழ்நாட்டில் பல்வேறு கிளைகளை கொண்டுள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் (Tamilnad Mercantile Bank Limited) இருந்து நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி (Managing Director and Chief Executive Officer) பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இப்பணியிடங்களுக்கான சம்பள விவரம், பணியிடங்கள் எண்ணிக்கை உள்ளிட்ட மேலும் விவரங்களை www.tmb.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். அது பற்றிய முழு தகவல்களையும் நாங்கள் கீழே வழங்கி உள்ளோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி |
பணியின் பெயர் | Managing Director and Chief Executive Officer |
பணியிடங்கள் | பல்வேறு |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 10.05.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
TMB தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி காலிப்பணியிடங்கள்:
Managing Director and Chief Executive Officer பதவிக்கு என தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி வயது வரம்பு:
மார்ச் 31, 2022 அன்று 62 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
தமிழகத்தின் Best TNPSC Coaching Centre
TMB தகுதி விவரங்கள்:
தலைமைப் பொது மேலாளர்/பொது மேலாளர் கேடரில் அல்லது அதற்கு மேல் ஏதேனும் ஒரு கொமர்ஷல் வங்கியில் பணிபுரிந்து அல்லது ஓய்வு பெற்றிருக்க வேண்டும். கருவூலம் / அந்நிய செலாவணி மற்றும் காப்பீடு, பரஸ்பர நிதிகள் போன்ற நீட்டிக்கப்பட்டவை உட்பட அனைத்து வணிக வங்கி நடவடிக்கைகளிலும் அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செயல் முறை:
மின்-விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணலின் விவரங்களுடன் அஞ்சல் / மின்னஞ்சல் மூலம் தனித்தனியாகத் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட வங்கி பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் www.tmbnet.in/tmb_careers/ வங்கியின் இணையதளத்தில் இருந்து தேவையான விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, முழு விவரங்களையும் அளித்து, மின்னஞ்சல் ([email protected]) அல்லது தபால் மூலம் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் உறையின் மீது “Confidential-Application for the Post of MD & CEO” எனக் குறிப்பிட்டு விண்ணப்பத்தை 10.05.2022 க்குள் சமர்ப்பிக்கலாம்.
ExamsDaily Mobile App Download
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
தலைவர்
MD & CEO தேர்வுக் குழு
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட்,
தலைமை அலுவலகம், 3வது தளம்
57, V.E. சாலை,
தூத்துக்குடி- 628002