அடுத்த 2 நாட்கள் வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மைய தகவல்!

0
அடுத்த 2 நாட்கள் வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மைய தகவல்!

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்கள் வரை பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மழைப்பொழிவு:

தமிழகத்தில் மார்ச் மாதத்தின் தொடக்கம் முதல் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வருகிறது. கோடை மழை எப்போது கொட்டும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருக்க தொடங்கியிருந்த நிலையில் கடந்த வாரம் முதல் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய தொடங்கியது. இந்நிலையில் இன்று முதல் 15ஆம் தேதி வரை தமிழகத்தின் ஒரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை TCS நிறுவனத்தில் வேலை – BE முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

குறிப்பாக 14 மற்றும் 15ம் தேதிகளில் தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது. ஆனால் 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக வெப்பநிலை சற்று குறைந்துள்ளதாக மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!