தமிழகத்தில் புதிதாக பொழுதுபோக்கு தீம் பார்க் – அரசின் அசத்தல் திட்டம்!

0
தமிழகத்தில் புதிதாக பொழுதுபோக்கு தீம் பார்க் - அரசின் அசத்தல் திட்டம்!
தமிழகத்தில் புதிதாக பொழுதுபோக்கு தீம் பார்க் - அரசின் அசத்தல் திட்டம்!
தமிழகத்தில் புதிதாக பொழுதுபோக்கு தீம் பார்க் – அரசின் அசத்தல் திட்டம்!

தமிழக அரசு சென்னையின் புறநகரில் பெரிய அளவிலான தீம் பார்க் ஒன்றை தொடங்க உள்ளது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழக சுற்றுலாத்துறை:

தமிழகத்தில் கண்ணை கவரும், மனதை உருக்கும் மற்றும் மக்களை மகிழ்விக்கும் வகையிலான பல்வேறு சுற்றுலா தளங்கள் உள்ளது. விடுமுறை நாட்களிலும் வார இறுதியிலும் இந்த சுற்றுலாத் தலங்களில் தான் மக்கள் தங்கள் பொழுதை போக்கி வருகின்றனர். தற்போது தமிழக சுற்றுலாத்துறை ஆனது கொள்கை விளக்க குறிப்பில் அமெரிக்காவில் உள்ள டிஸ்னி தீம் பார்க் போன்று தமிழகத்தில் சென்னை புறநகரில் 100 ஏக்கர் பரப்பளவில் தீம் பார்க் ஒன்றை அமைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு சுற்றுலாக் கொள்கை 2023 – முதல்வர் முக ஸ்டாலின் வெளியீடு!

இத்திட்டத்திற்கான பணிகள் தனியாரின் பங்களிப்புடன் இந்த தீம் பார்க் திட்டம் ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. இத்திட்டம் செயல்படுத்தப்படும் பட்சத்தில் தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் இந்த தீம் பார்க்கை காண வரக்கூடும். இதனால் தமிழக சுற்றுலா துறையானது வளர்ச்சியை எட்டும் என்று தெரிய வருகிறது.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!